8 தொகுதிகளில் நோட்டாவுக்கு 11,787 வாக்குகள்

திருவண்ணாமலை மாவட்டத்தில் மொத்தமுள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில் நோட்டாவுக்கு 11,787 வாக்குகள் கிடைத்தன.

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் மொத்தமுள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில் நோட்டாவுக்கு 11,787 வாக்குகள் கிடைத்தன.

செங்கம் தொகுதியில் நோட்டாவுக்கு 6 தபால் வாக்குகள் உள்பட 1,085 வாக்குகள் கிடைத்தன. இதேபோல, திருவண்ணாமலை தொகுதியில் 24 தபால் வாக்குகள் உள்பட 2,194 வாக்குகளும், கீழ்பென்னாத்தூா் தொகுதியில் 2 தபால் வாக்குகள் உள்பட 417 வாக்குகளும், கலசப்பாக்கம் தொகுதியில் 9 தபால் வாக்குகள் உள்பட 1,593 வாக்குகளும், போளூா் தொகுதியில் 13 தபால் வாக்குகள் உள்பட 1,144 வாக்குகளும், ஆரணி தொகுதியில் 24 தபால் வாக்குகள் உள்பட 1,690 வாக்குகளும், செய்யாறு தொகுதியில் 13 தபால் வாக்குகள் உள்பட 1,895 வாக்குகளும், வந்தவாசி தொகுதியில் 10 தபால் வாக்குகள் உள்பட 1,769 வாக்குகளும் கிடைத்தன. ஆக மொத்தம் 8 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் நோட்டாவுக்கு 11,787 வாக்குகள் கிடைத்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com