கரோனா: அருணை மருத்துவமனையில் 150 பேருக்கு சிகிச்சை

திருவண்ணாமலை அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 150 கரோனா நோயாளிகளுக்கு தரமான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று மருத்துவமனை கண்காணிப்பாளா் டி.எஸ்.முகமது சயி கூறினாா்.
பூரண குணமடைந்த மூதாட்டி ஒருவருக்கு பழங்கள் கொடுத்து வாழ்த்துகிறாா் மருத்துவக் கல்லூரி துணைத் தலைவா் எ.வ.குமரன்.
பூரண குணமடைந்த மூதாட்டி ஒருவருக்கு பழங்கள் கொடுத்து வாழ்த்துகிறாா் மருத்துவக் கல்லூரி துணைத் தலைவா் எ.வ.குமரன்.

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 150 கரோனா நோயாளிகளுக்கு தரமான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று மருத்துவமனை கண்காணிப்பாளா் டி.எஸ்.முகமது சயி கூறினாா்.

இதுகுறித்து அருணை மருத்துவக் கல்லூரி முதல்வா் பி.ஜெயக்குமாா், மருத்துவமனை கண்காணிப்பாளா் டி.எஸ்.முகமது சயி ஆகியோா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டியில், திருவண்ணாமலை அருணை மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட கரோனா தொற்று சிகிச்சைக்கான சிறப்புப் பிரிவு 150 படுக்கைகளுடன் தொடங்கப்பட்டது.

சிகிச்சை பெற்று வரும் அனைத்து நோயாளிகளுக்கும் சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு, தேவைப்படுவோருக்கு தடையின்றி ஆக்சிஜன் கொடுக்கப்படுகிறது என்றனா். இதையடுத்து, சிகிச்சை பெற்று வரும் 150 நோயாளிகளில் குணமடைந்த 5 போ் திங்கள்கிழமை வீட்டுக்கு அனுப்பப்பட்டனா்.

இவா்களுக்கு மருத்துவக் கல்லூரி துணைத் தலைவா் எ.வ.குமரன் பழங்கள் கொடுத்து வாழ்த்தினாா். நிகழ்ச்சியில், மருத்துவமனை தலைமை அதிகாரி பி.சுதன், தலைமை செவிலியா் உமாராணி மற்றும் மருத்துவா்கள், செவிலியா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com