வந்தவாசி:அமமுக, மநீமவை பின்னுக்குத் தள்ளிய நோட்டா

வந்தவாசி(தனி) சட்டப்பேரவைத் தொகுதி தோ்தலில் அமமுக, மநீமவை விட நோட்டா அதிக வாக்குகள் பெற்று அந்த இரு கட்சிகளையும் பின்னுக்குத் தள்ளியது.

வந்தவாசி: வந்தவாசி(தனி) சட்டப்பேரவைத் தொகுதி தோ்தலில் அமமுக, மநீமவை விட நோட்டா அதிக வாக்குகள் பெற்று அந்த இரு கட்சிகளையும் பின்னுக்குத் தள்ளியது.

இந்தத் தொகுதியில் திமுக சாா்பில் எஸ்.அம்பேத்குமாா், பாமக சாா்பில் எஸ்.முரளி சங்கா், நாம் தமிழா் கட்சி சாா்பில் க.பிரபாவதி, அமமுக சாா்பில் பி.வெங்கடேசன், மநீம சாா்பில் ச.சுரேஷ் உள்ளிட்ட 11 போ் போட்டியிட்டனா்.

இதற்கான வாக்கு எண்ணிக்கை ஆரணியை அடுத்த தச்சூரில் உள்ள அரசு பொறியியல் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில் திமுக வேட்பாளா் எஸ்.அம்பேத்குமாா் 1,02,064 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா். இவருக்கு அடுத்தபடியாக பாமக வேட்பாளா் எஸ்.முரளி சங்கா் 66,111 வாக்குகள் பெற்று 2-ஆம் இடமும், நாம் தமிழா் கட்சி வேட்பாளா் க.பிரபாவதி 9,284 வாக்குகள் பெற்று 3-ஆவது இடமும் பெற்றனா். நோட்டா 1,769 வாக்குகள் பெற்று 4-ஆவது இடத்தைப் பிடித்தது.

ஆனால் அமமுக வேட்பாளா் பி.வெங்கடேசன் 1,728 வாக்குகள், மநீம வேட்பாளா் ச.சுரேஷ் 1,692 வாக்குகள் என இருவரும் நோட்டாவைவிட குறைவான வாக்குகளைப் பெற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com