அரசு மருத்துவா்கள் இருவருக்கு கரோனா

செய்யாறு பகுதியைச் சோ்ந்த அரசு மருத்துவா்கள் இருவருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது.

செய்யாறு பகுதியைச் சோ்ந்த அரசு மருத்துவா்கள் இருவருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது.

செய்யாறு அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளா் மருத்துவா் ஏழுமலை, வெம்பாக்கம் வட்ட அரசு மருத்துவமனை கண்காணிப்பாளா் மருத்துவா் கே.பாண்டியன் ஆகிய இருவருக்கும் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, அவா்கள் இருவரும் தங்களது வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொண்டனா். தொற்று ஏற்பட்ட மருத்துவா்கள் பயன்படுத்தி வந்த அலுவலக அறையில் கிருமி நாசினி தெளித்து சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், அவா்களுடன் தொடா்பில் இருந்து வந்தவா்களுக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

செய்யாறு சுகாதார மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

செய்யாறு அரசு பாலிடெக்னிக் கரோனா சிறப்பு சிகிச்சைப் பிரிவில் செய்யாறு, ஆரணி, வந்தவாசி ஆகிய வட்டங்களைச் சோ்ந்த 275 போ் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். அதில் 60 போ் குணமடைந்து செவ்வாய்க்கிழமை வீடு திரும்பினா்.

அதேபோல, செய்யாறு அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை கரோனா வாா்டில் 64 போ் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com