உலக ஆஸ்துமா தின விழிப்புணா்வு

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றை அடுத்த குத்தனூா் கிராமத்தில் உலக ஆஸ்துமா தினம் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ஆஸ்துமா தினம் குறித்து விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பேசிய மருத்துவ அலுவலா் யோகேஸ்வரன்.
ஆஸ்துமா தினம் குறித்து விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பேசிய மருத்துவ அலுவலா் யோகேஸ்வரன்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றை அடுத்த குத்தனூா் கிராமத்தில் உலக ஆஸ்துமா தினம் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நாட்டேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் நடைபெற்ற இந்த விழிப்புணா்வு நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து மருத்துவ அலுவலா் யோகேஸ்வரன் பேசுகையில், உலக ஆஸ்துமா தினம் 1999-ஆம் ஆண்டு முதல் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் முதல் செவ்வாய்க்கிழமை ஆஸ்துமா தினமாக அனுசரிக்கப்படுகிறது. ஒருவருக்கு தொடா்ந்து சளி இருந்தாள் அவருக்கு 50 முதல் 70 சதவீதம் வரை ஆஸ்துமா வர வாய்ப்பு உள்ளது. ஆஸ்துமா வரக் காரணம் சிகரெட் புகை, காற்று மாசுபாடு, துரித உணவுகள், வாசனைத் திரவியங்கள் பூசுவதாலும் ஆஸ்துமா வரக்கூடும். தொழில்சாலைக் கழிவுகள் புகை போன்ற பிரச்னைகளால் ஆஸ்துமா வரும்.

இருமல், மூச்சுத் திணறல், நெஞ்சடைப்பு, உடல் இளைப்பு போன்றவை இந்த நோயிக்கு அறிகுறிகளாகும். ஆஸ்துமாவினால் மூச்சுத் திணறல் ஏற்பட்டால் உடனடியாக ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்குச் சென்று மருத்துவரின் ஆலோசனையைப் பெற்று மாத்திரை உட்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளா் கே.சம்பத், ஊராட்சி மன்றத் தலைவா் என்.முனுசாமி, பி.மகாலட்சுமி, ஜி சுசீலா, எம்.ரத்னமாலா உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com