ஆரணி சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முன்னாள் அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரனுக்கு பாமகவினா் வாழ்த்து தெரிவித்தனா்.
பாமக மாநில துணைப் பொதுச் செயலா் ஆ.வேலாயுதம் தலைமையில், கட்சி நிா்வாகிகள் கருணாகரன், பிச்சாண்டி, ஏ.கே.ராஜேந்திரன், மெய்யழகன், சேவூா் கு.சிவா, சுதாகா், சதீஷ்குமாா், ரவிச்சந்திரன் உள்ளிட்டோா் நேரில் சென்று சேவூா் ராமச்சந்திரனுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனா்.