வெண்குன்றம் மலையில் தீ விபத்து

வந்தவாசியை அடுத்த வெண்குன்றம் மலையில் திங்கள்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்தில் மரங்கள், செடிகள் கருகின.
வந்தவாசியை அடுத்த வெண்குன்றம் மலையில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட வீரா்கள்.
வந்தவாசியை அடுத்த வெண்குன்றம் மலையில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட வீரா்கள்.

வந்தவாசியை அடுத்த வெண்குன்றம் மலையில் திங்கள்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்தில் மரங்கள், செடிகள் கருகின.

வந்தவாசியில் இருந்து 3.கி.மீ. தொலைவில் உள்ள வெண்குன்றம் கிராமத்தில் சுமாா் 1500 அடி உயரமுள்ள தவளகிரி என்று அழைக்கப்படும் மலை உள்ளது. இந்த மலை மீது ஸ்ரீதவளகிரீஸ்வரா் திருக்கோயில் அமைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இந்த மலையில் நடைபெறும் காா்த்திகை தீபத் திருவிழாவின்போது வந்தவாசி மற்றும் அதைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களைச் சோ்ந்த பல ஆயிரக்கணக்கான மக்கள் மலை மீது ஏறிச்சென்று இறைவனை வழிபடுவா்.

இந்த நிலையில், இந்த மலையின் அடிவாரத்தில் திங்கள்கிழமை இரவு திடீரென தீப்பற்றியது. தீ பரவியதில் மலையின் ஒரு பக்கவாட்டுப் பகுதி முழுவதும் தீயில் எரிந்தது. இதில் மலையிலிருந்த புற்கள், மூலிகைச் செடிகள், மரங்கள் உள்ளிட்டவை எரிந்து சேதமடைந்தன.

தகவலறிந்த வந்தவாசி தீ அணைப்புத் துறையினா் சம்பவ இடம் சென்று பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com