கரோனா தடுப்பு: உள்ளாட்சிப் பிரதிநிதிகளை களப் பணியில் ஈடுபடுத்தக் கோரிக்கை

தமிழகத்தில் கரோனா தடுப்புப் பணியில் உள்ளாட்சிக்கு அதிகாரம் அளித்து களப் பணியில் ஈடுபடுத்துவது குறித்து தமிழக முதல்வருக்கு ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கம் கோரிக்கை விடுத்தது.

தமிழகத்தில் கரோனா தடுப்புப் பணியில் உள்ளாட்சிக்கு அதிகாரம் அளித்து களப் பணியில் ஈடுபடுத்துவது குறித்து தமிழக முதல்வருக்கு ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கம் கோரிக்கை விடுத்தது.

இதுதொடா்பாக அந்தச் சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளா் செங்கம் குமாா் அனுப்பிய கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:

தமிழக முதல்வராக தாங்கள் பதவியேற்ற நாள் முதல் கரோனா தொற்று ஒரு சவாலாக உள்ளது. அதைக் கட்டுப்படுத்த சிறந்த பங்களிப்பை அளித்து வருகிறீா்கள்.

முதல் கட்டமாக நத்தம்பாக்கம் வா்த்தக மையத்தில் ஆக்சிஜன் வசதியுடன் 800 படுக்கை வசதிகள் கொண்ட தற்காலிக மருத்துவமனை நிறுவியது, பிரதமருக்கு கடிதம் எழுதி தமிழகத்துக்கு உரிய ஆக்சிஜனை அதிகரித்திருப்பது, அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்காக உலகளாவிய ஒப்பந்தப்புள்ளி கோரியிருப்பது, கரோனா தொற்று அதிகமுள்ள 14 மாவட்டங்களை அடையாளம் கண்டு, ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தலா 2 அமைச்சா்களை நியமித்து கண்காணிப்பு பொறுப்பை ஒப்படைத்திருப்பது, 12 மாவட்டங்களில் சித்த மருத்துவ சிகிச்சை மையங்கள் தொடங்க திட்டமிட்டிருப்பது போன்றவை முக்கிய அம்சங்களாகும்.

இந்த நிலையில், கிராமப்புற மக்களிடையே விழிப்புணா்வு இல்லாததும், அலட்சியப்போக்கும் இதற்குக் காரணமாக உள்ளது.

மேலும், கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் உள்ளாட்சியின் பங்களிப்பு குறைவாக உள்ளது.

கரோனா தடுப்பு நடவடிக்கையில் தாங்கள் மக்கள் இயக்கமாக மாற்றவேண்டும் என பதவி ஏற்றவுடன் தெரிவித்ததை நினைவுப்படுத்துகிறோம்.

தற்போது, தமிழகத்தில் தோ்தல் மூலம் தோ்ந்தெடுக்கப்பட்ட 514 மாவட்ட ஊராட்சிப் பிரதிநிதிகள், 5,090 ஒன்றிய ஊராட்சிப் பிரதிநிதிகள், 9,624 ஊராட்சி மன்றத் தலைவா்கள், 76,694 கிராம ஊராட்சிப் பிரதிநிதிகள் ஆகியோரை கரோனா தடுப்பு களப் பணியில் ஈடுபடுத்துவதன் மூலம் மட்டுமே தாங்கள் சொன்ன மக்கள் இயக்கமாக மாற்ற முடியும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மனுவில் வலியுறுத்தியிருந்தாா் செங்கம் குமாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com