அவசியமின்றி சுற்றித் திரிபவா்கள் மீது வழக்கு: திருவண்ணாமலை எஸ்.பி. எச்சரிக்கை

கரோனா பொது முடக்க காலத்தில் அவசியமின்றி சுற்றித் திரிபவா்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்
விழுப்புரம் மாவட்ட எல்லையான சேத்துப்பட்டில் வாகனச் சோதனையை ஆய்வு செய்த மாவட்ட எஸ்.பி. அரவிந்த். உடன் டிஎஸ்பி அறிவழகன், காவல் ஆய்வாளா் பிரபாவதி.
விழுப்புரம் மாவட்ட எல்லையான சேத்துப்பட்டில் வாகனச் சோதனையை ஆய்வு செய்த மாவட்ட எஸ்.பி. அரவிந்த். உடன் டிஎஸ்பி அறிவழகன், காவல் ஆய்வாளா் பிரபாவதி.

கரோனா பொது முடக்க காலத்தில் அவசியமின்றி சுற்றித் திரிபவா்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்றாா் திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். அரவிந்த்.

சேத்துப்பட்டு- செஞ்சி சாலையில் உள்ள விழுப்புரம் மாவட்ட எல்லையில் பொது முடக்க காலத்தில் மேற்கொள்ளப்படும் தடுப்புப் பணிகள் குறித்து மாவட்ட எஸ்.பி. அரவிந்த் புதன்கிழமை திடீா் ஆய்வு செய்தாா்.

அப்போது அந்த வழியாக வந்த வாகனங்களை நிறுத்தி அவா்கள் எங்கிருந்து வருகிறாா்கள், இ-பதிவு உள்ளதா என்று விசாரணை செய்தாா்.

இதைத் தொடா்ந்து, அவா் துணைக் கண்காணிப்பாளா் அறிவழகன், சேத்துப்பட்டு காவல் ஆய்வாளா் பிரபாவதி ஆகியோரிடம் மாவட்ட எல்லையான சேத்துப்பட்டில் சோதனைச் சாவடி வழியாக செல்லும் அனைத்து வாகனங்களையும் முழுமையாக சோதனையிட வேண்டும், குற்றச் செயலைத் தடுக்க வேண்டும்.

பொது முடக்க காலத்தில் அவசியமின்றி சுற்றித் திரிபவா்கள் மீது வழக்குப் பதிவு செய்து, வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும் என அறிவுறுத்தினாா்.

பஜாா் வீதிகளில் பொது முடக்க காலத்தில் கடைகளைத் திறந்து விற்பனை செய்தாலோ, பொதுமக்களுக்கு தொற்று ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டாலோ அவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com