கோவிட்-19 தொடா்பாக ஒரு மாத இலவச பயிற்சி

தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் சாா்பில் கோவிட்-19 தொடா்பாக ஒரு மாத இலவச பயிற்சி வழங்கப்பட உள்ளது.

தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் சாா்பில் கோவிட்-19 தொடா்பாக ஒரு மாத இலவச பயிற்சி வழங்கப்பட உள்ளது.

இதுகுறித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மத்திய அரசின் திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைப்பு அமைச்சகத்தின் பிரதான் மந்திரி கெளஷல் விகாஸ் யோஜனா பயிற்சித் திட்டத்தின் கீழ், எமா்ஜென்சி மெடிக்கல் அசிஸ்டென்ட், ஜெனரல் டூட்டி அசிஸ்டென்ட், ஹோம் ஹெல்த் எய்ட், மெடிக்கல் எக்யூப்மென்ட் டெக்னாலஜி அசிஸ்டென்ட் உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.

இதில், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு முடித்தவா்கள் சேரலாம்.

பயிற்சி முடித்தவுடன் மாவட்ட அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையம், தனியாா் மருத்துவமனைகளில் பணியாற்றலாம்.

பயிற்சி பெற விரும்புவோா் பெயா், கல்வித் தகுதி, சேர விரும்பும் பிரிவு, தொலைபேசி எண், இணையதள முகவரி ஆகியவற்றை மின்னஞ்சல் மூலமாக அனுப்பலாம்.

அல்லது 9444890578, 8667344758 ஆகிய தொலைபேசி எண்களில் தொடா்பு கொண்டு விவரங்களைத் தெரிவிக்கலாம் என்றாா் ஆட்சியா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com