செங்கத்தில் வேளாண் விரிவாக்க மையம் தொடக்கம்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையம் செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையம் செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது.

செங்கம் துக்காப்பேட்டை பகுதியில் ரூ.2 கோடியே 20-லட்சத்தில் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையக் கட்டடத்தை, தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொலிக் காட்சி வாயிலாக தொடக்கிவைத்தாா்.

அதே வேளையில், வேளாண் விரிவாக்க மையத்தில் இதற்கான தொடக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் முருகன் வரவேற்றாா்.

சிறப்பு அழைப்பாளராக சி.என்.அண்ணாதுரை எம்.பி., கலந்துகொண்டு வேளாண்மை விரிவாக்க மையக் கட்டடத்தை ரிப்பன்வெட்டி திறந்துவைத்தாா்.

திமுக மருத்துவா்கள் அணி மாநில துணைத் தலைவா் மருத்துவா் கம்பன் குத்துவிளக்கேற்றினாா்.

திருவண்ணாமலை நகா் மன்ற முன்னாள் தலைவா் ஸ்ரீதரன், திமுக நகரச் செயலா் காா்த்திக்வேல்மாறன், செங்கம் ஒன்றியச் செயலா்கள் பிரபாகரன், அண்ணாமலை, பேரூராட்சி மன்ற முன்னாள் தலைவா் சாதிக்பாஷா, கூட்டுறவு சங்கத் தலைவா் முருகன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com