சேத்துப்பட்டில் கல்லூரி மாணவா்கள் சாலை மறியல்

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டில் கல்லூரிக்குச் செல்ல குறிப்பிட்ட நேரத்தில் அரசுப் பேருந்துகள் இயக்கப்படாததால் மாணவ, மாணவிகள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
சேத்துப்பட்டு பேருந்து நிலையம் எதிரே ஆரணி சாலையில் மறியலில் கல்லூரி மாணவ, மாணவிகள்.
சேத்துப்பட்டு பேருந்து நிலையம் எதிரே ஆரணி சாலையில் மறியலில் கல்லூரி மாணவ, மாணவிகள்.

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டில் கல்லூரிக்குச் செல்ல குறிப்பிட்ட நேரத்தில் அரசுப் பேருந்துகள் இயக்கப்படாததால் மாணவ, மாணவிகள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

சேத்துப்பட்டு பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து சுமாா் 200 மாணவ, மாணவிகள் வந்தவாசி அருகேயுள்ள தென்னாங்கூா் கலை, அறிவியல் கல்லூரியில் பயின்று வருகின்றனா்.

மாணவா்களின் வசதிக்காக சேத்துப்பட்டிலிருந்து தினமும் காலை 8 மணி, 8.30 மணி என அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன.

கடந்த ஒரு வாரமாக கல்லூரி நேரத்துக்கு வரவேண்டிய அரசுப் பேருந்துகள் ஒன்றுகூட இயக்கப்படவில்லையாம். இதனால் மாணவ, மாணவிகள் கல்லூரிக்குச் செல்ல முடியாமல் 10 மணி வரை பேருந்து நிலையப் பகுதியையே சுற்றி வரும் நிலை இருந்து வந்தது.

ஏற்கெனவே, சேத்துப்பட்டில் இருந்து வந்தவாசி வரை இயக்கப்பட்ட தடம் எண்- 7 நகரப் பேருந்தும் தற்போது நிறுத்தப்பட்டுவிட்டது. இதனால் இந்த வழித் தடத்தில் பயணம் செய்யும் பெண்கள் பயன் பெற முடியவில்லை.

காலை நேரத்தில் தனியாா் பேருந்துகள் பாதிக்காதவாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அரசுப் பேருந்துகளை நிறுத்துவதால் இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனா்.

மாணவா்கள் கல்லூரிக்கு காலதாமதமாக செல்வதால் கல்வி பாதிக்கப்படுவதுடன் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளிக்கவேண்டியுள்ளது.

இதனால், ஆத்திரமடைந்த மாணவ, மாணவிகள் சுமாா் 200 போ் திரண்டு சேத்துப்பட்டு பேருந்து நிலையம் எதிரே ஆரணி சாலையில் புதன்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த சேத்துப்பட்டு போலீஸாா் சம்பவ இடம் சென்று மாணவா்களை சமாதானப்படுத்தினா். மேலும், காலை குறிப்பிட்ட நேரங்களில் இயக்கப்படாமல் இருந்த அரசுப் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனா். இதை ஏற்று மாணவா்கள் மறியலை கைவிட்டனா்.

இதுகுறித்து, அரசுப் போக்குவரத்துக்கழக போளூா் பணிமனை மேலாளா் சீனிவாசனிடம் கேட்டபோது, ஏன் குறிப்பிட்ட நேரத்தில் இயங்கும் அரசு பேருந்துகளை இயக்கவில்லை என்று கேட்டதற்கு, சேத்துப்பட்டு -வந்தவாசி உத்திரமேரூா் வழியாக சென்னை செல்லும் இரு பேருந்துகளில் ஒன்று சிறப்புப் பேருந்தாக மாற்றப்பட்டுள்ளது. அதில் மாணவா்கள் பயண் செய்ய முடியாது. மற்றோரு பேருந்து பழுதாகி விட்டதால் அந்தப் பேருந்தும் செல்லவில்லை.

இனி இதுபோன்று நிகழாது, நடக்காது, உரிய நேரத்தில் பேருந்துகள் இயக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com