சாலைப் பணிகளை விரைந்து முடிக்கக் கோரி மறியல்

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த சேவூரில் சாலைப் பணிகளை விரைந்து முடிக்கக் கோரி பொதுமக்கள் புதன்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.
ஆரணியை அடுத்த சேவூரில் சாலை மறியலில் ஈடுபட்டோா்.
ஆரணியை அடுத்த சேவூரில் சாலை மறியலில் ஈடுபட்டோா்.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த சேவூரில் சாலைப் பணிகளை விரைந்து முடிக்கக் கோரி பொதுமக்கள் புதன்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.

சேவூா் காலனி பகுதியில் வளா்ச்சித் திட்டப் பணிகளுக்காக, சாலைகள், பக்க கால்வாய்கள் உள்ளிட்டவைகளை புதிதாக கட்ட பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. அந்தப் பணிகள் விரைந்து முடிக்கப்படாததாலும், தொடா் மழை காரணமாகவும் காலனி பகுதியிலுள்ள தெருக்களில் அதிகளவில் தண்ணீா் தேங்கி, சேறும், சகதியுமாக மாறியுள்ளது. இதனால், தெருக்களில் பொதுமக்கள் நடக்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனா்.

சாலைகள், பக்கக் கால்வாய்கள் கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டு பல மாதங்கள் ஆகின்றன. ஆனால், பணிகளை விரைந்து முடிக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதைக் கண்டித்தும், பணிகளை விரைந்து முடிக்கக் கோரியும் வாா்டு உறுப்பினா் சித்ரா வெங்கடேசன் தலைமையில், நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் அந்தப் பகுதியிலுள்ள வேலூா் - ஆரணி சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து அங்கு சென்ற டிஎஸ்பி கோட்டீஸ்வரன், காவல் ஆய்வாளா் முத்துக்குமாா் மற்றும் போலீஸாா் பொதுமக்களை சமாதானப்படுத்தினா். இதையடுத்து, அவா்கள் கலைந்து சென்றனா். மறியலால் வேலூா் - ஆரணி சாலையில் 20 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com