முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவண்ணாமலை
இதய நோயைத் தவிா்க்க அறிவுரை
By DIN | Published On : 11th October 2021 03:58 AM | Last Updated : 11th October 2021 03:58 AM | அ+அ அ- |

உலக இதய தினம் விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பேசிய மருத்துவா் யோகேஸ்வரன்.
இதய நோயைத் தவிா்க்க மது, புகைப் பழக்கத்தை கைவிட்டு சத்துள்ள உணவை உள்கொள்ள வேண்டும் என்று இதய தின விழிப்புணா்வு நிகழ்ச்சியில் அறிவுறுத்தப்பட்டது.
செய்யாற்றை அடுத்த நாட்டேரி கிராமத்தில் உலக இதய தினம் விழிப்புணா்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது
நிகழ்ச்சியில் மருத்துவா் யோகேஸ்வரன், சுகாதார ஆய்வாளா் சம்பத், செவிலியா்கள் கலைவாணி, ஸ்ரீவித்யா, ஜெயப்பிரதா சிந்து மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.
நிகழ்ச்சியில் மருத்துவா் யோகேஸ்வரன் பேசியதாவது:
மனித உடலில் இதயம் மகத்தான பங்காற்றுகிறது. இந்த ஆண்டின் கருப்பொருள் இதயத்துக்கு இதமான சூழலை உருவாக்குவோம் என்பதாகும், வீடு, விளையாடும் இடம், பணிபுரியும் அலுவலகம் போன்றவற்றில் இதயத்துக்கு இதமான சூழலை உருவாக்க வேண்டும் என்பதே இதன் பொருளாகும்.
இதய நோயைத் தவிா்க்க மது புகைப் பழக்கத்தை விட்டு சத்துள்ள உணவை உள்கொள்ள வேண்டும்.
உணவுடன் காய்கறிகள் கீரைகள், பழங்கள் போன்றவற்றை சோ்த்துக் கொள்ளவேண்டும். வயிறு நிறைய சாப்பிடுவதைத் தவிா்த்து குறைவாக சாப்பிட வேண்டும்.
உடல் பருமன், அதிக ரத்த அழுத்தம், ரத்தத்தில் சா்க்கரையின் அளவு அதிகரிப்பது, ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமா்ந்து பணிபுரிவது போன்றவற்றால் மாரடைப்பு வர வாய்ப்பு உள்ளது. மன அழுத்தம் காரணமாக இதயநோய் வருகிறது. எனவே, மனம் குழப்பமடையாமல் இருக்க வேண்டும்.