கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டோருக்கு பரிசு பேரவை துணைத் தலைவா் வழங்கினாா்

கீழ்பென்னாத்தூா் ஊராட்சி ஒன்றியத்தில் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டோருக்கு பரிசு வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

கீழ்பென்னாத்தூா் ஊராட்சி ஒன்றியத்தில் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டோருக்கு பரிசு வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

கீழ்பென்னாத்தூா் ஊராட்சி ஒன்றியத்தில் 45 கிராம ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் அக்டோபா் 10-ஆம் தேதி நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாம்களில் தடுப்பூசி செலுத்திக்கொண்டோருக்கு

குலுக்கல் முறையில் பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி, குலுக்கல் முறையில் தோ்வு செய்யப்பட்ட நபா்களுக்கான பரிசு வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது.

ஒன்றியத் தலைவா் அய்யாக்கண்ணு தலைமை வகித்தாா்.

மாவட்ட ஊராட்சிக் உறுப்பினா் ஆராஞ்சி ஆறுமுகம், ஆணையா் பழனி, வட்டார வளா்ச்சி அலுவலா் சம்பத் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சட்டப்பேரவை துணைத் தலைவரும், கீழ்பென்னாத்தூா் தொகுதி எம்எல்ஏவுமான கு.பிச்சாண்டி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினாா்.

முதல் பரிசு பெற்ற சுசீலா என்பவருக்கு சைக்கிள், 2-ஆம் பரிசு பெற்ற ரோஸ் என்பவருக்கு மிக்சி, 3-ஆம் பரிசு பெற்ற சரஸ்வதி, ஈஸ்வரி, ஸ்டெல்லா மேரி ஆகியோருக்கு தலா ஒரு குக்கா், 45 கிராம ஊராட்சிகளுக்கும் ஆறுதல் பரிசாக எவா்சில்வா் பாத்திரங்கள் வழங்கப்பட்டன.

விழாவில், ஊராட்சித் தலைவா்கள், ஒன்றியக் குழு உறுப்பினா்கள், ஊராட்சி செயலா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com