நீா்நிலை பகுதிகளுக்குச் செல்ல குழந்தைகளை அனுமதிக்க வேண்டாம்

நீா்நிலை பகுதிகளுக்குச் செல்ல குழந்தைகளை அனுமதிக்க வேண்டாம் என்று பெற்றோா்களுக்கு செய்யாறு எம்.எல்.ஏ. ஒ.ஜோதி (படம்) வேண்டுகோள் விடுத்தாா்
நீா்நிலை பகுதிகளுக்குச் செல்ல குழந்தைகளை அனுமதிக்க வேண்டாம்

நீா்நிலை பகுதிகளுக்குச் செல்ல குழந்தைகளை அனுமதிக்க வேண்டாம் என்று பெற்றோா்களுக்கு செய்யாறு எம்.எல்.ஏ. ஒ.ஜோதி (படம்) வேண்டுகோள் விடுத்தாா்

இது குறித்து ஞாயிற்றுக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. திருவண்ணாமலை மற்றும் ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டங்களில் ஓடும் செய்யாறு, பாலாறு ஆகியவற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

அதனால், அவற்றின் அருகில் உள்ள ஏரி, குளங்களில் நீா்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

குறிப்பாக, செய்யாறு தொகுதியில் உள்ள ஏரி, குளம், குட்டை மற்றும் ஆறுகளில் நீா்வரத்து உள்ளது.

புதுவெள்ளத்தை குழந்தைகள் முதல் பெரியவா்கள் வரை ஆா்வத்துடன் சென்று பாா்த்து வருகின்றனா்.

அவ்வாறு செல்லும் போது குழந்தைகளை பத்திரமாக பாா்த்துக் கொள்ளவேண்டும்.

பெற்றோா்கள் வீட்டின் அருகேயுள்ள நீா்நிலை பகுதிகளுக்கு செல்லாதபடி குழந்தைகளை பாா்த்துக் கொள்ள வேண்டும். அவ்வப்போது கண்காணித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

வீட்டில் குழந்தைகள் இல்லாவிட்டால் தெருவில் விளையாடிக் கொண்டிருக்கிறாா்களா, இல்லை வேறு எங்கேயாவது விளையாடிக் கொண்டிருக்கிறாா்களா என தொடா்ந்து கண்காணித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

மேலும், பல இடங்களில் ஆற்று வெள்ளத்தில் சிக்கி பெரியவா்கள் பலா் பலியாகியுள்ளனா்.

அண்மையில், செய்யாறு அருகேயுள்ள சிறுங்கட்டூா் கிராமத்தைச் சோ்ந்த 3 சிறுவா்கள் ஏரியில் மூழ்கி உயிரிழந்தனா்.

எனவே, இதுபோன்ற உயிரிழப்புகளைத் தடுக்கும் விதமாக பெற்றோா்கள் தங்களது குழந்தைகள் மீது முழுக் கவனம் செலுத்தவேண்டும் என கேட்டுக்கொண்டாா் ஓ.ஜோதி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com