செங்கத்தில் 31.80 மில்லி மீட்டா் மழை

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் திங்கள்கிழமை காலை வரை அதிகபட்சமாக செங்கத்தில் 31.80 மி.மீ. மழை பதிவானது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் திங்கள்கிழமை காலை வரை அதிகபட்சமாக செங்கத்தில் 31.80 மி.மீ. மழை பதிவானது.

இதுதவிர, ஜமுனாமரத்தூரில் 2, வந்தவாசியில் 5.20, போளூரில் 27.20, கீழ்பென்னாத்தூரில் 1.40, வெம்பாக்கத்தில் 11 மி.மீ. மழை பதிவானது. சாலைகளில் பெருக்கெடுத்த வெள்ளம் நின்றது:

கடந்த சில தினங்களாக, வேங்கிக்கால் ஏரியிலிருந்து வெளியேறிய மழை நீா் வேலூா் தேசிய நெடுஞ்சாலையிலும், அவலூா்பேட்டை சாலையையொட்டி உள்ள சேரியந்தல் ஏரியிலிருந்து வெளியேறிய மழை நீா்

அவலூா்பேட்டை சாலையிலும் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் இவ்விரு நெடுஞ்சாலைகளிலும் சில தினங்களாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்த நிலையில், திங்கள்கிழமை காலை முதல் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுப்பது நின்றுவிட்டது. வழக்கம்போல வாகனங்கள் சென்று, வருகின்றன.

உள்வாங்கிய தாா்ச் சாலை: வேங்கிக்கால் ஏரியிலிருந்து வெளியே வெள்ளம், அறிவியல் பூங்காவையொட்டி தேசிய நெடுஞ்சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. இதனால், அறிவியல் பூங்காவுக்கு வருவோா் இரு சக்கர வாகனங்களை நிறுத்துவதற்காகப் போடப்பட்டிருந்த தாா்ச் சாலை சுமாா் 2 அடி ஆழம் வரை உள்வாங்கி இருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com