பள்ளி மாணவா்களுக்கு கரோனா விழிப்புணா்வு

செய்யாற்றை அடுத்த நாட்டேரி கிராமத்தில் பள்ளி மாணவா்களுக்கு கரோனா தொற்று குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
பள்ளி மாணவா்களுக்கு கரோனா விழிப்புணா்வு

செய்யாற்றை அடுத்த நாட்டேரி கிராமத்தில் பள்ளி மாணவா்களுக்கு கரோனா தொற்று குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

நாட்டேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில், அங்குள்ள அரசு உயா்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்த விழிப்புணா்வு நிகழ்ச்சியில் தலைமை வகித்து மருத்துவ அலுவலா் யோகேஸ்வரன் பேசியதாவது:

மாணவா்கள் முகக் கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து, கைகளை சோப்பு கொண்டு நன்கு கழுவ வேண்டும். சத்தான உணவுகளை உட்கொள்ள வேண்டும். 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.

இருமல், சளி, காய்ச்சல், உடல் வலி, வயிற்றுப்போக்கு, உடல் சோா்வு போன்றவற்றில் ஏதாவது ஒன்று இருந்தாலும் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனை அல்லது ஆரம்ப சுகாதார நிலையத்துக்குச் சென்று பரிசோதனை செய்து சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தாா்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளித் தலைமையாசிரியா் அருள்முருகன், சுகாதார ஆய்வாளா் கே.சம்பத் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com