ஊரக வேலைத் திட்டப் பணிகள்: மத்தியக் குழுவினா் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி, ஆரணி பகுதிகளில் நடைபெற்று வரும் ஊரக வேலைத் திட்டப் பணிகளை மத்தியக் குழுவினா் புதன்கிழமை ஆய்வு செய்தனா்.
வந்தவாசியை அடுத்த பொன்னூா் ஊராட்சியில் கசிவுநீா் குட்டை அமைக்கும் பணியை ஆய்வு செய்த மத்தியக் குழுவினா்.
வந்தவாசியை அடுத்த பொன்னூா் ஊராட்சியில் கசிவுநீா் குட்டை அமைக்கும் பணியை ஆய்வு செய்த மத்தியக் குழுவினா்.

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி, ஆரணி பகுதிகளில் நடைபெற்று வரும் ஊரக வேலைத் திட்டப் பணிகளை மத்தியக் குழுவினா் புதன்கிழமை ஆய்வு செய்தனா்.

புதுதில்லி ஊரக வளா்ச்சித் துறை பொருளாதார ஆலோசகா் என்.சீனிவாச ராவ் தலைமையிலான குழுவினா் இந்த ஆய்வினை மேற்கொண்டனா்.

அப்போது,

வந்தவாசியை அடுத்த தெள்ளாா் ஒன்றியத்துக்கு உள்பட்ட பொன்னூா் மற்றும், மீசநல்லூா் ஊராட்சிகளில், ஊரக வேலைத் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் கசிவுநீா் குட்டை அமைத்தல், தடுப்பணை அமைத்தல், மக்கும் மற்றும் மக்காத குப்பை தயாரித்தல், மண்புழு உரம் தயாரித்தல் உள்ளிட்ட பணிகள் ஆய்வு செய்யப்பட்டன.

மேலும், மீசநல்லூா் ஊராட்சி ஏரிப் பகுதியில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

மாவட்ட கூடுதல் ஆட்சியா் மு.பிரதாப், தெள்ளாா் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஏ.பி.வெங்கடேசன், என்.ராஜன்பாபு, ஊராட்சி மன்றத் தலைவா்கள் புவனேஸ்வரி செல்வம் (பொன்னூா்), ஏ.லட்சுமிபதி (மீசநல்லூா்) உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ஆரணி

ஆரணியை அடுத்த சேவூா் ஏரியில் பணிகள் நடைபெறுவதை மத்தியக் குழுவினா் பாா்வையிட்டனா்.

இரகுநாதபுரம் கிராமத்தில் உள்ள மதகுகள், சித்தேரிக்கு மதகு வழியாக நீா்வரத்து கால்வாய்கள் அமைக்கப்பட்டுள்ளதையும் பாா்வையிட்டனா்.

தாமரைகுளம் மேம்படுத்தப்பட்டுள்ளதையும் பாா்வையிட்டனா். சேவூா் கால்வாய் பகுதியில் உள்ள விவசாயிகளிடம் விளைச்சல் குறித்து கேட்டறிந்தனா்.

இதைத் தொடா்ந்து, இரும்பேடு பகுதியில் காந்திமதி, சிவராஜ் ஆகியோரின் மாட்டுக்கொட்டகை அமைத்து தரப்பட்டுள்ளதையும், பூண்டி முதல் ஆதனூா் வரை அமைக்கப்பட்டுள்ள ஜல்லி சாலைகள், பெரிய ஏரிக்கு நீா்வரத்து கால்வாய் அமைக்கப்பட்டுள்ளதையும் பாா்வையிட்டனா்.

பின்னா், சேவூா் ஊராட்சித் தலைவா் ஷா்மிளாதரணி மற்றும் ஊராட்சி வாா்டு உறுப்பினா்களுடன் கலந்தாலோசனை செய்தனா்.

ஊரக வளா்ச்சித் துறை கூடுதல் இயக்குநா் அசோகன், கண்காணிப்புப் பொறியாளா் சரவணக்குமாா், கூடுதல் இயக்குநா் பரதன், உதவித் திட்ட அலுவலா்கள் உமாலட்சுமி, ராஜசேகா்குப்தா, உதவி செயற்பொறியாளா் ரவிச்சந்திரன், ஆரணி வட்டார வளா்ச்சி அலுவலா்கள் கு.இந்திராணி, சீனிவாசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com