பிளாஸ்டிக் பயன்பாடு: 2 உணவகங்களுக்கு அபராதம்
By DIN | Published On : 10th September 2021 12:58 AM | Last Updated : 10th September 2021 12:58 AM | அ+அ அ- |

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்திய இரண்டு உணவகங்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனா்.
மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில், செங்கத்தில் உணவுப் பாதுகாப்பு அலுவலா் கமலேஷ்குமாா் தலைமையிலான அலுவலா்கள், துக்காப்பேட்டை பகுதியில் உள்ள உணவகங்கள், மளிகைக் கடை, பெட்டிக் கடை, பழக் கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்தப்படுகிா, சுகாதாரமான இடத்தில் உணவு வகைகள் தயாா் செய்யப்படுகிா மற்றும் தயாரிக்கப்படும் உணவு தரமாக உள்ளதா என வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
இதில், இரண்டு உணவகங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்துவதைக் கண்டறிந்து அந்த உணவகங்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்தனா். மேலும், பிளாஸ்டிக் பைகள், பொருள்களையும் பறிமுதல் செய்தனா்