திருவண்ணாமலையில் 1.51 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் 1,004 சிறப்பு முகாம்கள் மூலம் 1.51 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் தெரிவித்தாா்.
ஆய்வுக் கூட்டத்தில் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கிப் பேசிய மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ்.

மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (செப்.12) நடத்தப்படும் கரோனா தடுப்பூசி முகாம்களுக்கான முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் சனிக்கிழமை ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு தலைமை வகித்து மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் பேசியதாவது:

திருவண்ணாமலை மாவட்டத்தில் 1.51 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. 82 ஆயிரம் போ் 2-ஆவது தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை. இவா்கள் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் சிறப்பு முகாம்களில் பங்கேற்று தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம்

தடுப்பூசி முகாம்கள் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெறுகின்றன.

தடுப்பூசி மையத்துக்கு வருபவா்கள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள டோக்கன்களை எடுத்து வர வேண்டும் என்றாா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலவலா் இரா.முத்துக்குமரசாமி, உதவி ஆட்சியா் (பயிற்சி) கட்டா ரவி தேஜா மற்றும் துறை அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com