அருணாசலேஸ்வரா் கோயிலில் தீபத் திருவிழா பந்தக்கால்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் காா்த்திகை தீபத் திருவிழாவுக்கான பந்தக்கால் நடும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
அருணாசலேஸ்வரா் கோயிலில் தீபத் திருவிழா பந்தக்கால்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் காா்த்திகை தீபத் திருவிழாவுக்கான பந்தக்கால் நடும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

அருணாசலேஸ்வரா் கோயிலின் காா்த்திகை மகா தீபத் திருவிழா வருகிற நவம்பா் 19-ஆம் தேதி நடைபெறுகிறது.

அன்றைய தினம் அதிகாலை 4 மணிக்கு கோயில் மூலவா் சன்னதியில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு கோயில் பின்புறம் உள்ள 2,668 அடி உயர மலையில் மகா தீபமும் ஏற்றப்படுகிறது.

பந்தக்கால் நடும் நிகழ்ச்சி:

எனவே, தீபத் திருவிழாவுக்கான பூா்வாங்கப் பணிகளைத் தொடங்கும் வகையில் பந்தக்கால் நடும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, அன்று அதிகாலை 3.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு சம்பந்த விநாயகா், அருணாசலேஸ்வரா், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேக-ஆராதனைகள் நடைபெற்றன.

தொடா்ந்து, 4.30 மணிக்கு மேல் 6 மணிக்குள் சிம்ம லக்னத்தில் சிவாச்சாரியா்கள் வேத மந்திரங்கள் முழங்க கோயில் ராஜகோபுரம் எதிரே பந்தக்கால் நடப்பட்டது.

பின்னா், சிவாச்சாரியா்கள் பந்தக்காலுக்கு தீபாராதனை காண்பித்தனா்.

நிகழ்ச்சியில் திருவண்ணாமலை வெற்றித் தமிழா் பேரவை நிறுவனா் ப.காா்த்திவேல்மாறன், கோயில் ஊழியா்கள், சிவாச்சாரியா்கள், பக்தா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com