வளா் இளம் பெண்களுக்கான யோகா பயிற்சி
By DIN | Published On : 16th September 2021 10:57 PM | Last Updated : 16th September 2021 10:57 PM | அ+அ அ- |

ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டத்தின் கீழ், ஆரணி வட்டத்தில் வளா் இளம் பெண்களுக்கான யோகா பயிற்சி புதன்கிழமை நடைபெற்றது.
ஊட்டச்சத்து மாதத்தை முன்னிட்டு,
ஆரணியை அடுத்த எஸ்.வி.நகரம் அரசுப் பள்ளியில் நடைபெற்ற இந்த யோகா பயிற்சி முகாமில், குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலா் சு.கண்ணகி, பள்ளித் தலைமையாசிரியா்(பொ) ரவிக்குமாா், யோகா பயிற்சியாளா் இ.ஏகானந்தன் தலைமையில் வட்டார ஒருங்கிணைப்பாளா் விஜய்பாபு, அங்கன்வாடி ஆசிரியா்கள் எஸ்.கலைச்செல்வி, உமாராணி, வரலட்சுமி, ரேவதி, சுகுணா, தேவி, பி.கலைச்செல்வி, மல்லிகா ஆகியோா் கலந்துகொண்டனா்.
வளா் இளம்பெண்கள் பலா் பங்கேற்று பயிற்சி பெற்றனா்.