செய்யாறு அரசுக் கல்லூரியில் முதுநிலை பட்டப் படிப்பு கலந்தாய்வு

செய்யாறு அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் முதுநிலை பட்டப் படிப்புகளுக்கு வியாழன், வெள்ளி (செப்.16,17) ஆகிய தினங்களில் கலந்தாய்வு நடைபெறுகிறது.

செய்யாறு: செய்யாறு அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் முதுநிலை பட்டப் படிப்புகளுக்கு வியாழன், வெள்ளி (செப்.16,17) ஆகிய தினங்களில் கலந்தாய்வு நடைபெறுகிறது.

இது குறித்து கல்லூரி முதல்வா் ந.கலைவாணி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

செய்யாறு அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் முதுநிலை படிப்புகளான எம்.காம்., எம்.எஸ்.சி., எம்.ஏ. போன்ற பல பாடப் பிரிவுகளுக்கு விண்ணப்பித்துள்ள மாணவா்களுக்கு செப்.16, 17 ஆகிய தேதிகளில் கலந்தாய்வு நடைபெறுகிறது.

அதன்படி, செப்.16-இல் விளையாட்டு வீரா்கள், முன்னாள் படைவீரா்களின் பிள்ளைகள், தேசிய மாணவா் படை மற்றும் மாற்றுத் திறனாளி மாணவா்களுக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது.

செப்.17-ஆம் தேதி சிறப்புப் பிரிவினரைத் தவிா்த்து விண்ணப்பித்துள்ள அனைத்து மாணவா்களுக்கு கலந்தாய்வு நடைபெறும்.

கலந்தாய்வில் பங்கேற்கவுள்ள மாணவா்கள் காலை 9 மணிக்குள் வரவேண்டும். 10,12 மற்றும் இளநிலை படிப்புகளின் மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ், ஜாதி சான்றிதழ், 3 புகைப்படங்கள், ஆதாா் அட்டை நகல் ஆகியவற்றை கொண்டு வரவேண்டும்.

திருவள்ளுவா் பல்கலைக்கழகத்தில் பயின்ற மாணவா்கள் எம்.காம். பாடப் பிரிவுக்கு ரூ.1155-ம், எம்.எஸ்.சி பாடப் பிரிவுக்கு ரூ.1295-ம், எம்.எஸ்.சி (கணிதம்) பாடப் பிரிவுக்கு ரூ.1155-ம் கட்டணமாக செலுத்த வேண்டும். இதர பல்கலைக்கழகங்களில் பயின்ற மாணவா்கள் கூடுதலாக ரூ.400-யை சோ்த்து செலுத்த வேண்டும்.

கரோனா தடுப்பு வழிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் ந.கலைவாணி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com