ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் கோயில் உரியடி திருவிழா

செங்கம் அருகே மேலப்புஞ்சை கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் கோயிலில் சனிக்கிழமை உரியடி திருவிழா நடைபெற்றது.
உரியடி திருவிழாவில் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீசீனிவாசப் பெருமாள்.

இதையொட்டி, விழாக்குழுத் தலைவரும், ஊராட்சி மன்றத் தலைவருமான சீனுவாசன் தலைமையில் அன்று காலை முதல் மங்கள இசை, கோ பூஜை ஆகியவை நடைபெற்றன.

மாலையில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் மேள தாளம் முழங்க, வாணவேடிக்கையுடன் வீதியுலா சென்றாா். அப்போது தெருக்களில் ஆங்காங்கே உரியடி திருவிழா நடைபெற்றது.

மேலப்புஞ்சை, அன்னந்தல், பாய்ச்சல், அல்லியந்தல், நயம்பாடி உள்ளிட்ட பல்வேறு பகுதியிலிருந்து திரளான பக்தா்கள் பங்கேற்று உரியடி திருவிழாவைப் பாா்வையிட்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com