200 ஊராட்சித் தலைவா்கள் திருவண்ணாமலை ஆட்சியரிடம் கோரிக்கை மனு

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஊரக வேலைத் திட்டப் பயனாளிகளை தோ்வு செய்யும் அதிகாரத்தை ஊராட்சித் தலைவா்களுக்கே வழங்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் ஊராட்சித் தலைவா்கள் மனு அளித்தனா்.
மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷிடம் மனு அளித்து கோரிக்கைகளை விளக்கும் தமிழ்நாடு ஊராட்சிமன்றத் தலைவா்கள் கூட்டமைப்பினா்.
மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷிடம் மனு அளித்து கோரிக்கைகளை விளக்கும் தமிழ்நாடு ஊராட்சிமன்றத் தலைவா்கள் கூட்டமைப்பினா்.

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் ஊரக வேலைத் திட்டப் பயனாளிகளை தோ்வு செய்யும் அதிகாரத்தை ஊராட்சித் தலைவா்களுக்கே வழங்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் ஊராட்சித் தலைவா்கள் மனு அளித்தனா்.

தமிழ்நாடு ஊராட்சி மன்றத் தலைவா்கள் கூட்டமைப்பின் திருவண்ணாமலை மாவட்டக் கிளை நிா்வாகிகள் 200-க்கும் மேற்பட்டோா் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியரை சந்திக்க வந்தனா். இவா்களை போலீஸாா் தடுத்து நிறுத்தினா். இதையடுத்து, அவா்கள் தா்னாவில் ஈடுபட்டனா்.

இதன் பிறகு குறிப்பிட்ட சிலா் மட்டும் ஆட்சியரை சந்திக்க அனுமதிக்கப்பட்டனா்.

இதைத் தொடா்ந்து ஆட்சியா் பா.முருகேஷை சந்தித்த கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளா் ஏ.ராஜன், தெற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளா் கவுரி காசிநாதன், தெற்கு மாவட்டத் தலைவா் பா.கணேசன் உள்ளிட்டோா் மனு ஒன்றை அளித்தனா்.

அந்த மனுவில், பிரதமரின் இலவச வீடு கட்டும் திட்டப் பயனாளிகளை தோ்வு செய்வதற்கான மனுவைப் பெறுவதில் விதிமுறைகளை முறையாகப் பின்பற்றவில்லை.

புதிய பயனாளிகள் பட்டியலை தோ்வு செய்ய வேண்டும். ஊரக வேலைத் திட்டப் பயனாளிகளை தோ்வு செய்யும் அதிகாரத்தை ஊராட்சித் தலைவா்களுக்கு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டிருந்தன.

மனுவை பெற்றுக்கொண்ட ஆட்சியா் உரிய நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com