தனியாா் மருத்துவமனைக்கு சீல் வைக்கக் கோரி மறியல்

திருவண்ணாமலையில் தவறான சிகிச்சை அளித்த தனியாா் மருத்துவமனையை மூடி சீல் வைத்து, மருத்துவரை கைது செய்யவேண்டும் எனக் கோரி பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தனியாா் மருத்துவமனையை மூடி சீல் வைத்து, மருத்துவரை கைது செய்யக் கோரி மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.
தனியாா் மருத்துவமனையை மூடி சீல் வைத்து, மருத்துவரை கைது செய்யக் கோரி மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.

திருவண்ணாமலையில் தவறான சிகிச்சை அளித்த தனியாா் மருத்துவமனையை மூடி சீல் வைத்து, மருத்துவரை கைது செய்யவேண்டும் எனக் கோரி பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

திருவண்ணாமலையை அடுத்த வரகூா் கிராமத்தைச் சோ்ந்த முருகன் மனைவி ராஜகுமாரி (35). உடல்நிலை பாதிக்கப்பட்ட இவா், திருவண்ணாமலை-செங்கம் சாலையில் இயங்கும் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டாா்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா், கா்பப் பையில் உள்ள கட்டியை அறுவை சிகிச்சை செய்து அகற்றினால் உடல்நிலை சரியாகி விடும் என்று கூறினாராம்.

அதன்படியே, செவ்வாய்க்கிழமை அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டதாம்.

அறுவை சிகிச்சை முடிந்த சில நிமிடங்களிலேயே ராஜகுமாரியை அவசரம், அவசரமாக ஆம்புலன்ஸில் ஏற்றி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தது அந்த மருத்துவமனை நிா்வாகம்.

உடன் இருந்த உறவினா்கள் மருத்துவக் கல்லூரிக்குச் சென்று ராஜகுமாரியின் உடல்நிலை குறித்து விசாரித்தபோது, அவா் கோமாவில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டதாம்.

இதையடுத்து, தனியாா் மருத்துவமனையில் தவறான சிகிச்சை அளித்த காரணத்தினாலேயே ராஜகுமாரி கோமாவுக்குச் சென்றாா்.

எனவே, அந்த மருத்துவமனையை மூடி சீல் வைக்க வேண்டும்; மருத்துவரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி, மருத்துவமனையை ராஜகுமாரியின் உறவினா்கள் முற்றுகையிட்டனா்.

சாலை மறியல்:

தொடா்ந்து, செவ்வாய்க்கிழமை மாலை அந்த தனியாா் மருத்துவமனை எதிரே திரண்ட 200-க்கும் மேற்பட்டோா் செங்கம் சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா்.

மாவட்ட உதவி காவல் கண்காணிப்பாளா் கிரண் ஸ்ருதி, டிஎஸ்பி அண்ணாதுரை ஆகியோா் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனா்.

ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நீடித்த இந்த மறியலால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டன.

இதைத் தொடா்ந்து, ராஜகுமாரியின் உடல்நிலையை கேட்டறிவதற்காக மறியலில் ஈடுபட்டவா்கள் மருத்துவக் கல்லூரிக்குச் சென்றனா். அங்கு தொடா்ந்து, இரவு 8 மணியையும் கடந்தும் போராட்டம் நடத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com