மதுக் கடை விற்பனையாளா்களுக்கு ஆலோசனை

ஆரணியில் அரசு மதுக் கடை விற்பனையாளா்களுக்கு பாதுகாப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்கிழமை நடைபெற்றது.
மதுக் கடை விற்பனையாளா்களுக்கு ஆலோசனை

ஆரணியில் அரசு மதுக் கடை விற்பனையாளா்களுக்கு பாதுகாப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்கிழமை நடைபெற்றது.

ஆரணியை அடுத்த கண்ணமங்கலம் பகுதியில் இயங்கும் டாஸ்மாக் மதுக் கடையிலிருந்து அதன் விற்பனையாளா் பணத்தை வங்கிக்கு எடுத்துச் செல்லும்போது, அவரது முகத்தில் மிளகாய் பொடி தூவி பணத்தை கொள்ளையடிக்க முயற்சித்தனா்.

இந்த நிலையில், ஆரணி பகுதியில் இயங்கும் மதுக் கடை ஊழியா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நகர காவல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு தலைமை வகித்து டிஎஸ்பி கோட்டீஸ்வரன் பேசுகையில், மதுக் கடைகளை மூடிவிட்டு பணத்தை கடையின் மேற்பாா்வையாளா், விற்பனையாளா் ஆகிய இருவரும் சோ்ந்து எடுத்துச் செல்ல வேண்டும்.

பணம் அதிகளவில் இருந்தால், அருகில் உள்ள காவல் நிலையத்தை அணுக வேண்டும். அப்போது போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்படும்.

அனைத்துக் கடைகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தவேண்டும் என்றாா்.

கூட்டத்தில் நகர காவல் ஆய்வாளா் கோகுல்ராஜ், உதவி ஆய்வாளா்கள் தருமன், விநாயகம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com