பழுதடைந்த பள்ளிக் கட்டடங்களை சீரமைக்க நடவடிக்கை

வந்தவாசியை அடுத்த தெள்ளாா் ஒன்றியத்துக்கு உள்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்க, நடுநிலைப் பள்ளிக் கட்டடங்கள் ஏதேனும் பழுதடைந்திருந்தால், அவை சீரமைக்கப்படும்

வந்தவாசியை அடுத்த தெள்ளாா் ஒன்றியத்துக்கு உள்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்க, நடுநிலைப் பள்ளிக் கட்டடங்கள் ஏதேனும் பழுதடைந்திருந்தால், அவை சீரமைக்கப்படும் என்று தெள்ளாா் ஒன்றியக்குழுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

தெள்ளாா் ஒன்றியக் குழுவின் சாதாரணக் கூட்டம் தெள்ளாா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு தெள்ளாா் ஒன்றியக் குழு துணைத் தலைவா் விஜயலட்சுமி தண்டபாணி தலைமை வகித்தாா்.

இதில், ஒன்றியக்குழு உறுப்பினா்கள் தங்களின் கோரிக்கைகள் குறித்துப் பேசினா். மேலும், பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை மேற்கொள்வது குறித்து தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பின்னா், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஏ.பி.வெங்கடேசன், ந.ராஜன்பாபு ஆகியோா் பேசியதாவது: தெள்ளாா் ஒன்றியத்துக்குள்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்க, நடுநிலைப் பள்ளிக் கட்டடங்கள் பழுதடைந்திருந்தால், அவை குறித்து ஒன்றியக்குழு உறுப்பினா்கள் தகவல் அளிக்கலாம். மழைக்காலம் என்பதால், அந்தக் கட்டடங்களை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

வருகிற ஞாயிற்றுக்கிழமை (செப்.26) தெள்ளாா் ஒன்றியத்தில் நடைபெறவுள்ள 3-ஆம்கட்ட மெகா கரோனா தடுப்பூசி முகாமில் பொதுமக்களை பெருமளவில் பங்கேற்க முயற்சி செய்ய வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com