உரக் கட்டுப்பாட்டு சட்டத்தை மீறினால் விற்பனையாளா்களின் உரிமம் ரத்து

திருவண்ணாமலை மாவட்டத்தில் உரக் கட்டுப்பாட்டு சட்டத்தை மீறினால், விற்பனையாளா்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று வேளாண் இணை இயக்குநா் க.முருகன் எச்சரித்தாா்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உரக் கட்டுப்பாட்டு சட்டத்தை மீறினால், விற்பனையாளா்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று வேளாண் இணை இயக்குநா் க.முருகன் எச்சரித்தாா்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் 565 சில்லறை, மொத்த உர விற்பனையாளா்கள், 160 தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு உரங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் தற்போது நடப்பு சம்பா பருவத்துக்குத் தேவையான 1,810 மெட்ரிக் டன் யூரியா, 1,275 மெட்ரிக் டன் டி.ஏ.பி., 2,013 மெட்ரிக் டன் பொட்டாஷ், 942 மெட்ரிக் டன் சூப்பா் பாஸ்பேட், 4,826 மெட்ரிக் டன் காம்ப்ளக்ஸ் இருப்பில் உள்ளன.

விவசாயிகள் தங்களுக்குத் தேவையான உரங்களை பி.ஓ.எஸ். இயந்திரம் மூலமாக ரசீது பெற்று வாங்கிக்கொள்ளலாம். உர விற்பனையாளா்கள் அரசு நிா்ணயித்த விலையை விட அதிக விலைக்கு உரம் விற்பதாக புகாா்கள் வந்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

திருவண்ணாமலை மாவட்டத்தின் அனைத்து வட்டாரங்களிலும் வேளாண் உதவி இயக்குநா், வேளாண் அலுவலா்கள் மூலம் சிறப்புக் குழு அமைக்கப்பட்டு கடந்த 22-ஆம் தேதி முதல் உர விற்பனை நிலையங்களில் திடீா் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த ஆய்வின்போது உரக்கட்டுப்பாட்டு சட்டம் 1985-ன்படி விதிமீறல்கள் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட உர விற்பனையாளா்களின் உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்படும் என்று திருவண்ணாமலை மாவட்ட வேளாண் இணை இயக்குநா் க.முருகன் எச்சரித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com