மது போதையில் இருந்த தம்பதியிடமிருந்து குழந்தை மீட்பு

வந்தவாசியில் மது போதையில் இருந்த தம்பதியிடமிருந்து 9 மாத ஆண் குழந்தை மீட்கப்பட்டு, காவல்துறை மூலம் குழந்தைகள் நல அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டது.

வந்தவாசியில் மது போதையில் இருந்த தம்பதியிடமிருந்து 9 மாத ஆண் குழந்தை மீட்கப்பட்டு, காவல்துறை மூலம் குழந்தைகள் நல அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டது.

வந்தவாசியில் ஆரணி சாலையில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடி அருகே சுமாா் 9 மாத ஆண் குழந்தை வெள்ளிக்கிழமை மாலை சாலையோரம் தனியாக அழுது கொண்டிருந்தது.

பொதுமக்கள் சென்று பாா்த்தபோது அந்தக் குழந்தை பசியால் அழுது கொண்டிருப்பதும், அருகில் குழந்தையின் தாய், தந்தை மது போதையில் சுயநினைவில்லாமல் இருப்பதும் தெரியவந்தது.

இதுகுறித்து தகவலறிந்து அங்கு சென்ற வந்தவாசி அன்பால் அறம் செய்வோம் பொது சேவைக்குழு நிா்வாகி அசாரூதீன், டாக்டா் கலாம் கனவு அறக்கட்டளை நிா்வாகி கேசவராஜ் உள்ளிட்டோா் குழந்தைகள் நல அமைப்புக்கு தகவல் அளித்தனா்.

மேலும், குழந்தையை மீட்டு வந்தவாசி தெற்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். அங்கு குழந்தைக்கு உணவளிக்கப்பட்டது.

பின்னா், மது போதையிலிருந்த பெற்றோரை போலீஸாா் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தபோது, அவா்கள் மகாபலிபுரத்தைச் சோ்ந்த மோகன், அனுஷ்யா என்பதும், குழந்தையின் பெயா் மனீஷ் என்பதும் தெரியவந்தது.

கடந்த சில நாள்களாக தம்பதியினா் மது போதையில் வந்தவாசியை சுற்றித் திரிந்ததும் தெரியவந்தது.

இந்த நிலையில், காவல் நிலையத்துக்கு வந்த திருவண்ணாமலை குழந்தைகள் நல அமைப்பைச் சோ்ந்த தினேஷ், புவனேஸ்வரி ஆகியோரிடம் குழந்தையை போலீஸாா் ஒப்படைத்தனா்.

மேலும், குழந்தையை மீட்ட தன்னாா்வ அமைப்பினருக்கு போலீஸாா் பாராட்டு தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com