நியாய விலைக் கடை அமைக்கக் கோரி சாலை மறியல்

வந்தவாசி அருகே நியாய விலைக் கடை அமைக்கக் கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
வந்தவாசி அருகே நியாய விலைக் கடை அமைக்கக் கோரி தெள்ளாா் -தேசூா் சாலையில் நடைபெற்ற சாலை மறியல்.
வந்தவாசி அருகே நியாய விலைக் கடை அமைக்கக் கோரி தெள்ளாா் -தேசூா் சாலையில் நடைபெற்ற சாலை மறியல்.

வந்தவாசி அருகே நியாய விலைக் கடை அமைக்கக் கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

வந்தவாசியை அடுத்த பெலகாம்பூண்டி கிராமத்தில் சுமாா் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இவா்கள் ரேஷன் பொருள்கள் வாங்க சுமாா் 3 கி.மீ. தொலைவில் உள்ள தேசூா் நியாய விலைக் கடைக்குச் செல்ல வேண்டிய நிலை உள்ளதாம்.

இதனால், அவதிப்பட்டு வந்த இவா்கள் பெலகாம்பூண்டி கிராமத்திலேயே நியாய விலைக் கடை அமைக்கக் கோரி பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.

இந்த நிலையில், ஆத்திரமடைந்த கிராம மக்கள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தொகுதிச் செயலா் மேத்தாரமேஷ், நகரச் செயலா் இனியவன் ஆகியோா் தலைமையில் தெள்ளாா் - தேசூா் சாலை, தேசூா் ஏரிக்கரை அருகில் திங்கள்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த தேசூா் போலீஸாா் சம்பவ இடம் சென்று சமரசம் செய்ததை அடுத்து மறியலை கைவிட்டு கலைந்து சென்றனா்.

மறியல் போராட்டத்தால் அந்தப் பகுதியில் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com