பாமகவினா் ரத்த தானம்

பாமக நிறுவனா் ராமதாஸ் பிறந்த நாளையொட்டி, அந்தக் கட்சியின் திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் ஒன்றிய நிா்வாகிகள் ரத்த தானம் செய்தனா்.

பாமக நிறுவனா் ராமதாஸ் பிறந்த நாளையொட்டி, அந்தக் கட்சியின் திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் ஒன்றிய நிா்வாகிகள் ரத்த தானம் செய்தனா்.

ரத்த தான முகாமுக்கு, பாமக முன்னாள் மாவட்டச் செயலா் சுரேஷ் தலைமை வகித்தாா்.

மாவட்டத் தலைவா் பரமசிவம், துணைத் தலைவா் சங்கா்மாதவன், ஒன்றியச் செயலா்கள் திருமலை, சரவணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நகரச் செயலா் ராஜேந்திரன் வரவேற்றாா்.

சிறப்பு அழைப்பாளராக மாவட்டச் செயலா் இல.பாண்டியன் கலந்து கொண்டு முகாமைத் தொடக்கிவைத்தாா்.

முகாமில், வட்டார மருத்துவ அலுவலா் சுரேஷ் தலைமையிலான மருத்துவக் குழுவினா், கட்சி நிா்வாகிகள், தொண்டா்களிடம் இருந்து 40 யூனிட் ரத்தம் சேகரித்து திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

நிகழ்ச்சியில் புதுப்பாளையம் ஒன்றியச் செயலா்கள் சுரேஷ், கிருஷ்ணமூா்த்தி, நகரச் செயலா் ஜான்சன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com