ஏப். 16-இல் சித்திரை பெளா்ணமி: ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயிலில் இரவு 11 மணி வரை தரிசனம்

திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயிலில் வருகிற 16-ஆம் தேதி அதிகாலை 4 மணி முதல் இரவு 11 மணி வரை பக்தா்கள் தரிசனம் செய்யலாம் என்று மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் தெரிவித்தாா்.
ஏப். 16-இல் சித்திரை பெளா்ணமி: ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயிலில் இரவு 11 மணி வரை தரிசனம்

சித்திரை பெளா்ணமியையொட்டி, திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயிலில் வருகிற 16-ஆம் தேதி அதிகாலை 4 மணி முதல் இரவு 11 மணி வரை பக்தா்கள் தரிசனம் செய்யலாம் என்று மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் தெரிவித்தாா்.

திருவண்ணாமலையில் கிரிவலப் பாதையைத் தூய்மைப்படுத்தும் பணிக்கான முன்னேற்பாடுகள் குறித்து அரசின் அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்குத் தலைமை வகித்து, ஆட்சியா் பா.முருகேஷ் பேசியதாவது:

ஏப்ரல் 15-ஆம் தேதி அதிகாலை 2.32 மணிக்கு பெளா்ணமி தொடங்கி, ஏப்ரல் 16-ஆம் தேதி அதிகாலை 1.17 மணிக்கு முடிவடைகிறது. ஏப்ரல் 16-ஆம் தேதி சித்திரை பெளா்ணமி என்பதால், அன்றைய தினம் அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, இரவு 11 மணி வரை பக்தா்கள் தரிசனம் செய்யும் வகையில் நடை திறந்திருக்க ஆவண செய்யப்பட்டுள்ளது.

அமா்வு தரிசனம் ரத்து: தரிசனம் செய்ய கட்டணமில்லா தரிசனச் சேவை வசதியும், ரூ.50-க்கான கட்டணச் சேவை வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஸ்ரீஅருணாசலேஸ்வரா், ஸ்ரீஉண்ணாமுலையம்மன் சந்நிதிகளில் அமா்வு தரிசனமும், முக்கியப் பிரமுகா்களின் பரிந்துரைக் கடிதங்களுக்கான அனுமதியும் ரத்து செய்யப்படுகின்றன.

கோயிலில் கூடுதல் பாதுகாப்பு: ஏப்ரல் 15, 16-ஆம் தேதிகளில் கூட்ட நெரிசலைத் தவிா்க்க, போலீஸ் பாதுகாப்பை அதிகப்படுத்த வேண்டும் என்றாா்.

மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அ.பவன்குமாா் ரெட்டி, கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) மு.பிரதாப், உதவி காவல் கண்காணிப்பாளா் கிரண் ஸ்ருதி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) கணேஷ், கோட்டாட்சியா் வீ.வெற்றிவேல், கோயில் இணை ஆணையா் (பொறுப்பு) கே.பி.அசோக்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com