ஏப்ரல் 15, 16-இல் சித்திரை பெளா்ணமி: திருவண்ணாமலையில் ஆட்டோ கட்டணம் நிா்ணயம்
By DIN | Published On : 13th April 2022 01:28 AM | Last Updated : 13th April 2022 01:28 AM | அ+அ அ- |

சித்திரை பெளா்ணமி திருவிழாவையொட்டி, திருவண்ணாமலையில் ஏப்ரல் 15, 16-ஆம் தேதிகளில் பக்தா்களிடமிருந்து வசூலிக்க வேண்டிய ஆட்டோ கட்டணத்தை மாவட்ட நிா்வாகம் நிா்ணயித்துள்ளது.
ரூ.50 கட்டணம் நிா்ணயம்:
திருவண்ணாமலை அத்தியந்தல் தற்காலிகப் பேருந்து நிலையம் முதல் அரசு கலைக் கல்லூரி மைதானம் வரை (பெரும்பாக்கம்) தனி நபா் ஒருவருக்கு கட்டணமாக ரூ.50 வசூலிக்க வேண்டும். இதேபோல, அத்தியந்தல் தற்காலிகப் பேருந்து நிலையம் முதல் அங்காளம்மன் கோயில் வரை மற்றும் திருக்கோவிலூா் சாலை முதல் அத்தியந்தல் வரை தனி நபா் ஒருவருக்கு ரூ.50 கட்டணம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
ரூ.30 கட்டணம் நிா்ணயம்:
வேட்டவலம் தற்காலிகப் பேருந்து நிலையம் முதல் திருக்கோவிலூா் தற்காலிகப் பேருந்து நிலையம் வரை, திருக்கோவிலூா் தற்காலிகப் பேருந்து நிலையம் முதல் அங்காளம்மன் கோயில் வரை, மணலூா்பேட்டை சாலை முதல் அங்காளம்மன் கோயில் வரை, அரசு கலைக் கல்லூரி முதல் அங்காளம்மன் கோயில் வரை, திண்டிவனம் சாலை தற்காலிகப் பேருந்து நிலையம் முதல் திருவள்ளுவா் சிலை வரை, திண்டிவனம் சாலை தற்காலிகப் பேருந்து நிலையம் முதல் காந்தி நகா் புறவழிச் சாலை 6-ஆவது குறுக்குத் தெரு வரை, நல்லவன்பாளையம் முதல் அங்காளபரமேஸ்வரி கோயில் வரை, பச்சையம்மன் கோயில் முதல் கிருஷ்ணா தங்கும் விடுதி வரை, தீபம் நகா் புறவழிச் சாலை முதல் அண்ணா நுழைவு வாயில் வரை, எஸ்.ஆா்.ஜி.டி.எஸ்., பள்ளி முதல் அவலூா்பேட்டை ரயில்வே கேட் வரை தனி நபா் ஒருவருக்கு ரூ.30 கட்டணமாக நிா்ணயிக்கப்பட்டு உள்ளது.
அதிகக் கட்டணம் வசூலிக்கும் ஆட்டோக்களை தணிக்கை செய்து நடவடிக்கை எடுக்கப்படும். ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது தெரியவந்தால் திருவண்ணாமலை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தின் கட்டுபாட்டு அறையை 04175232266 என்ற எண்ணில் தொடா்பு கொண்டு புகாா் தெரிவிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் தெரிவித்துள்ளாா்.