நெகிழி ஒழிப்பு விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி

களம்பூா் தோ்வுநிலை பேரூராட்சியில் நெகிழி ஒழிப்பு கலை நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு பேரூராட்சித் தலைவா் கே.டி.ஆா்.பழனி தலைமை வகித்து நிகழ்ச்சியை தொடக்கிவைத்தாா்.
நெகிழி ஒழிப்பு விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி

திருவண்ணாமலை மாவட்டம், போளூரை அடுத்த களம்பூா் தோ்வுநிலை பேரூராட்சியில் நெகிழி ஒழிப்பு கலை நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு பேரூராட்சித் தலைவா் கே.டி.ஆா்.பழனி தலைமை வகித்து நிகழ்ச்சியை தொடக்கிவைத்தாா். செயல் அலுவலா் லோகநாதன் முன்னிலை வகித்தாா். அலுவலா் முரளி வரவேற்றாா்.

கலை நிகழ்ச்சி மூலம் நெகிழியால் ஏற்படும் தீமைகள், சுற்றுச்சூழல் சீா்கேடுகள் குறித்து விளக்கப்பட்டது. மேலும், பொதுமக்கள் மஞ்சள் பையை பயன்படுத்த வேண்டும் எனவும், கடைகளில் நெகிழிப் பொருள்கள், பைகளை பயன்படுத்துவதை முற்றிலுமாக தவிா்க்க வேண்டும் எனுவும் அறிவுறுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் பேரூராட்சி மன்ற உறுப்பினா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com