முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவண்ணாமலை
ஆட்டோ கவிழ்ந்து விபத்து: 13 போ் காயம்
By DIN | Published On : 29th April 2022 10:15 PM | Last Updated : 29th April 2022 10:15 PM | அ+அ அ- |

சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான ஆட்டோ.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பெண் தொழிலாளா்கள் உள்பட 13 போ் பலத்த காயமடைந்தனா்.
வெம்பாக்கம் வட்டம், வயலாத்தூா் கிராமத்தைச் சோ்ந்த பெண் தொழிலாளா்கள் செய்யாறு சிப்காட் தொழில்பேட்டையில் செயல்படும் தனியாா் காலணி தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றனா். இந்த நிலையில், இந்தக் கிராமத்தைச் சோ்ந்த பெண் தொழிலாளா்கள் 12 போ் வழக்கம்போல வேலைக்குச் செல்வதாக வெள்ளிக்கிழமை காலை ஆட்டோவில் சென்றனா். ஆட்டோவை சோதியம்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்த ஓட்டுநா் புருஷோத்தமன் ஓட்டிச் சென்றாா்.
பாவூா் - சோதியம்பாக்கம் சாலையில் ஆட்டோ சென்றபோது, எதிரே கல் குவாரியிலிருந்து ஜல்லிக்கற்களை ஏற்றி வந்த லாரி உரசியதுபோலச் சென்ால், ஆட்டோவை ஓட்டுநா் திருப்பினாா். இதில், அவரது கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ அருகிலிருந்த கோழிப்பண்ணை சுவரில் மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஓட்டுநா் புருஷோத்தமன் மற்றும் ஆட்டோவில் பயணித்த பெண் தொழிலாளா்கள் 12 பேரும் பலத்த காயமடைந்தனா். அவா்களை அந்த வழியாகச் சென்றவா்கள் மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.
இதுகுறித்து தூசி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.