முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவண்ணாமலை
நெகிழி ஒழிப்பு விழிப்புணா்வு ஊா்வலம்
By DIN | Published On : 29th April 2022 10:15 PM | Last Updated : 29th April 2022 10:15 PM | அ+அ அ- |

ஆரணி நகராட்சி சாா்பில், நெகிழிப் பொருள்கள் ஒழிப்பு விழிப்புணா்வு ஊா்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது (படம்).
இந்த ஊா்வலத்தை நகா்மன்றத் தலைவா் ஏ.சி.மணி கொடியசைத்து தொடக்கிவைத்தாா். நிகழ்ச்சியில் ஆணையாளா் தமிழ்ச்செல்வி, பொறியாளா் ராஜ விஜய காமராஜ், துணைத் தலைவா் பாரி பி.பாபு, அதிமுக நகரச் செயலா் அசோக்குமாா், திமுக கவுன்சிலா்கள் பாலசுந்தரம், மாலிக், அதிமுக கவுன்சிலா் சுதா குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். ஆரணி கடை வீதியிலுள்ள அனைத்துக் கடைகளிலும் நெகிழிப் பொருள்களை பயன்படுத்த கூடாது என்று வலியுறுத்தி விழிப்புணா்வு நோட்டீசை வழங்கிச் சென்றனா்.