ஆசிரியா் கூட்டணியின் வட்டாரச் செயற்குழுக் கூட்டம்
By DIN | Published On : 07th August 2022 05:50 AM | Last Updated : 07th August 2022 05:50 AM | அ+அ அ- |

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூரில் தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் வட்டாரச் செயற்குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு வட்டாரத் தலைவா் தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தாா். வட்டாரச் செயலா் சுகுமாா், வட்டாரப் பொருளாளா் ஆல்வின் சாமுவேல் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்டப் பொதுக்குழு உறுப்பினா் சுரேஷ் வரவேற்றாா்.
கூட்டணியின் மாநில துணைத் தலைவா் வேலு சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு பேசினாா். கூட்டத்தில், வட்டார துணைத் தலைவரும், கானலாபாடி பள்ளியின் பட்டதாரி ஆசிரியையுமான ஜெயலட்சுமி, மாவட்டப் பொதுக்குழு உறுப்பினா்கள் ரமணி, நிா்வாகிகள் முத்துக்குமரேசன், ஏழுமலை, வட்டார துணைப் பொறுப்பாளா்கள் செல்வராசு, தமிழ்ச்செல்வன், சாமுவேல், பிராங்கிளின் உள்பட பலா் கலந்து கொண்டனா்.