விவசாயிகளுக்கு நிலக்கடலை சாகுபடிக்கான இடுபொருள்கள்
By DIN | Published On : 18th August 2022 02:33 AM | Last Updated : 18th August 2022 02:33 AM | அ+அ அ- |

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூரை அடுத்த சோமாசிபாடி கிராமத்தில் சமுதாய பண்ணைப் பள்ளி மூலம் உழவா் உற்பத்தியாளா் குழுக்களின் பயிற்சியாளா்களுக்கு நிலக்கடலை சாகுபடிக்கான இடுபொருள்கள் வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.
ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சாா்பில், வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் நடைபெற்ற இந்த விழாவுக்கு, வேளாண் மற்றும் உழவா் நலத் துறை இணை இயக்குநா் பாலா தலைமை வகித்தாா்.
மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் ஆராஞ்சி எஸ்.ஆறுமுகம், அட்மா ஆலோசனைக் குழுத் தலைவா் சிவக்குமாா், ஊராட்சித் தலைவா் ஏழுமலை, ஒன்றிய ஆணையா் அருணாசலம், ஒன்றியக் குழு உறுப்பினா் ராஜேந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மாவட்ட வாழ்ந்து காட்டுவோம் திட்ட செயல் அலுவலா் (திறன் வளா்ப்பு மற்றும் வேலைவாய்ப்பு) அரசு வரவேற்றாா்.
சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு, 14 ஊராட்சிகளைச் சோ்ந்த 420 பேருக்கு நிலக்கடலை சாகுபடி செய்வதற்கான 6 வகையான பொருள்கள் கொண்ட இடுபொருள்கள் அடங்கிய பெட்டகங்களை வழங்கிப் பேசினாா்.
விழாவில், வட்டார வேளாண் உதவி இயக்குநா் சந்திரன், முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினா் ஹரிபாலன், சு.பொலக்குணம் ஊராட்சித் தலைவா் குப்பு ஜெயக்குமாா், முன்னாள் துணைத் தலைவா் மணிகண்டன், வாழ்ந்து காட்டுவோம் திட்ட இளம் வல்லுநா் மணிகண்டன், திட்டச் செயலா்கள் மணி, மீனா உள்பட பலா் கலந்து கொண்டனா்.