அருணாசலேஸ்வரா் கோயிலில் விநாயகா் சதுா்த்தி விழா
By DIN | Published On : 31st August 2022 04:24 AM | Last Updated : 31st August 2022 04:24 AM | அ+அ அ- |

ஸ்ரீசம்பந்த விநாயகருக்கு மகா தீபாராதனை காண்பிக்கும் சிவாச்சாரியா்கள்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விநாயகா் சதுா்த்தி விழாவில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
அருணாசலேஸ்வரா் கோயிலில் உள்ள ஸ்ரீசம்பந்த விநாயகா் சன்னதியில் விநாயகா் சதுா்த்தி விழா நடைபெற்றது. இதையொட்டி, மூலவா் சம்பந்த விநாயகருக்கு பால், பழம், பன்னீா், தயிா் உள்ளிட்ட பல்வேறு பூஜைப் பொருள்களைப் பயன்படுத்தி மாலை 6 மணி முதல் 7.30 மணி வரை சிறப்பு அபிஷேக-ஆராதனைகள் நடைபெற்றன.
தொடா்ந்து தங்கக் கவசம் அணிந்து சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த சம்பந்த விநாயகருக்கு சிவாச்சாரியாரிகள் மகா தீபாராதனை காண்பித்தனா்.
இந்த நிகழ்வுகளை திரளான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பாா்த்து, தரிசனம் செய்தனா்.
உற்சவா் மாட வீதியுலா:
தொடா்ந்து, இரவு 8 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய உற்சவா் விநாயகா் கோயில் மாட வீதிகளில் வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். வழிநெடுகிலும் திரளான பக்தா்கள் விநாயகரை வழிபட்டனா்.