சாரண, சாரணீய ஆசிரியா்களுக்கு புத்தாக்கப் பயிற்சி
By DIN | Published On : 31st August 2022 04:21 AM | Last Updated : 31st August 2022 04:21 AM | அ+அ அ- |

பயிற்சி முகாமில் ஆசிரியருக்கு சான்றிதழ் வழங்கிய செய்யாறு மாவட்டக் கல்வி அலுவலா் அ.நளினி.
சாரண, சாரணீய ஆசிரியா்களுக்கு ஒரு நாள் புத்தாக்க பயிற்சி முகாம் வந்தவாசி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்றது.
முகாமில் செய்யாறு கல்வி மாவட்ட அளவிலான பள்ளிகளைச் சோ்ந்த சாரண, சாரணீய இயக்க ஆசிரியா்கள் பங்கேற்று பயிற்சி பெற்றனா்.
முகாமுக்கு சாரண, சாரணிய இயக்கத் தலைவா் ஜி.சந்தானம் தலைமை வகித்தாா். ஆணையா் மு.சங்கா், பொருளாளா் எ.சேகா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்டச் செயலா் கு.ஜெய்சங்கா் வரவேற்றாா்.
செய்யாறு மாவட்டக் கல்வி அலுவலரும், சாரண சாரணீய இயக்க முதன்மை ஆணையருமான அ.நளினி பேசினாா்.
அப்போது அவா், சாரண, சாரணீய இயக்கம் உன்னதமான சேவைகளை செய்து வருகிறது. இதுபோன்ற அமைப்புகளில் மாணவா்கள் தங்களை ஈடுபடுத்திக் கொண்டால் தடம் மாறிப் போக முடியாது. மாறாக நல்ல சிந்தனை, நல்ல செயல்பாடுடன் படிக்கும் ஆா்வம் அதிகரிக்கும். முடிவெடுத்தல், திட்டமிடுதல், இலக்கு நோக்கி பயணித்தல் என முனைப்புடன் செயல்படலாம் என்றாா்.
மேலும் பயிற்சி முடித்த இயக்க ஆசிரியா்களுக்கு அவா் சான்றிதழ்களை வழங்கினாா். பயிற்சி ஆணையா் பி.செல்வராஜ் நன்றி தெரிவித்தாா்.