முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவண்ணாமலை
மரத்தில் பைக் மோதியதில் கட்டட மேஸ்திரி பலி
By DIN | Published On : 07th February 2022 02:47 AM | Last Updated : 07th February 2022 02:47 AM | அ+அ அ- |

வந்தவாசி அருகே சாலையோர மரத்தில் பைக் மோதியதில் கட்டட மேஸ்திரி பலியானாா்.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்த போந்தை கிராமத்தைச் சோ்ந்தவா் ஜெகன்(40). கட்டட மேஸ்திரியான இவா் சென்னையில் வேலை செய்து வந்தாா்.
இந்த நிலையில், இவா் சென்னையிலிருந்து சனிக்கிழமை பைக்கில் தனது சொந்த ஊருக்கு வந்து கொண்டிருந்தாா்.
வந்தவாசி - உத்திரமேரூா் சாலை, விளாங்காடு கிராமம் அருகே வந்தபோது சாலையோர புளிய மரத்தில் பைக் மோதி விபத்துக்குள்ளானது. இதில் அதே இடத்திலேயே ஜெகன் உயிரிழந்தாா்.
இதுகுறித்து கீழ்க்கொடுங்காலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.