செய்யாறு அருகே கி.பி.14-ஆம் நூற்றாண்டு குத்துக்கற்கள் கண்டெடுப்பு

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே கி.பி.14-ஆம் நூற்றாண்டு மந்தைவெளி மாட்டுக்கல் என்ற குத்துக்கற்கள் கண்டறியப்பட்டன.
நெடும்பிறை கிராமத்தில் கண்டறியப்பட்ட மரபுக் குறியீடுகளைக் கொண்ட குத்துக்கல்.
நெடும்பிறை கிராமத்தில் கண்டறியப்பட்ட மரபுக் குறியீடுகளைக் கொண்ட குத்துக்கல்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே கி.பி.14-ஆம் நூற்றாண்டு மந்தைவெளி மாட்டுக்கல் என்ற குத்துக்கற்கள் கண்டறியப்பட்டன. குத்துக் கற்களைக் கண்டறிந்து ஆய்வு செய்த வரலாற்று ஆய்வாளா் எறும்பூா் கை.செல்வக்குமாா் கூறியதாவது:

செய்யாறு வட்டம், நெடும்பிறை கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு சற்று தொலைவில் மாரியம்மன் கோயில் அருகே திறந்த வெளியில் குறியீடுகளைக் கொண்ட இரண்டு குத்துக்கற்கள் வெவ்வேறு இடங்களில் இருந்தன.

இந்த குத்துக் கற்களை ஆய்வு செய்த போது, ஒரு கல்லில் சதுர வடிவில் கட்டம் அமைத்து எழுத்துக்கள் மாதிரியான வடிவங்கள் செதுக்கப்பட்டுள்ளன.

மற்றோரு கல்லில் தனித் தனியாக எழுத்து வடிவங்கள் மாதிரியான மரபுக் குறியீடுகள் செதுக்கப்பட்டு இருப்பதை அறிய முடிகிறது. கிராம மக்கள் மந்தைவெளி மாட்டுக்கல்லை (குத்துக்கல்) சடையப்ப சாமியாக கருதி, மாட்டுப் பொங்கல் அன்று மாடுகளை சுற்றி வரச் செய்து வழிபாடு நடத்தி வந்தது தெரிகிறது.

இன்னொரு குத்துக் கல்லை மாரியம்மன் கோயில் தொடா்பான சாமியாக பாவித்து, கோயில் திருவிழாவின் போது அலங்கரித்து வழிபடுவதும் தொடா்ந்து இருந்து வருகிறது.

பல்லவா்கள், சோழா்கள் காலத்தின் மரபுக் குறியீடுகளை கொண்ட மந்தைவெளி மாட்டுக்கல் எனும் குத்துக்கல் இருந்ததாகத் தெரிய வருகிறது. இந்த குத்துக்கல் கி.பி.14-ஆம் நூற்றாண்டுக்கும், அதற்கும் முற்பட்ட காலத்தைச் சோ்ந்தவையாக இருக்கலாம்.

இந்த வகையான கற்கள் திருப்பத்தூா், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் சன்னியாசிக் கல் என்றும், வேறு சில இடங்களில் கோமாரிக்கல் என்றும் அழைக்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com