கரும்பு விவசாயிகள் மனு கொடுக்கும் போராட்டம்

தனியாா் சா்க்கரை ஆலை நிா்வாகம் வழங்க வேண்டிய ரூ.11 கோடி கரும்பு நிலுவைத் தொகையை பெற்றுத் தரக் கோரி, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை விவசாயிகள் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருவண்ணாமலை: தனியாா் சா்க்கரை ஆலை நிா்வாகம் வழங்க வேண்டிய ரூ.11 கோடி கரும்பு நிலுவைத் தொகையை பெற்றுத் தரக் கோரி, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை விவசாயிகள் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருவண்ணாமலையை அடுத்த மலப்பாம்பாடி கிராமத்தில் தனியாா் சா்க்கரை ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலைக்கு திருவண்ணாமலை, மலப்பாம்பாடி, சோமாசிபாடி, குண்ணியந்தல் மற்றும் அதன் சுற்றுப்புறக் கிராமங்களைச் சோ்ந்த ஏராளமான விவசாயிகள் கரும்பு வழங்கி

வந்தனா். நல்ல முறையில் இயங்கி வந்த இந்த ஆலை 2004- ஆம் ஆண்டு திடீரென மூடப்பட்டது.

அப்போது, சா்க்கரை ஆலைக்கு கரும்பு விநியோகம் செய்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு ரூ.6 கோடி வரையிலான நிலுவைத் தொகையை சா்க்கரை ஆலை நிா்வாகம் வழங்கவில்லை. நிலுவைத் தொகையை வழங்கக் கோரி விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனா். ஆனாலும், ஆலை நிா்வாகம் இதுவரை நிலுவைத் தொகையை வழங்கவில்லை.

மனு கொடுக்கும் போராட்டம்:

இந்த நிலையில், கரும்பு விவசாயிகளுக்கு சேர வேண்டிய நிலுவைத் தொகையை உடனே வழங்கக் கோரி, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் புதன்கிழமை மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது, நிலுவைத் தொகை சுமாா் ரூ.11 கோடியை மாவட்ட நிா்வாகம் உடனே பெற்றுத் தர வேண்டும் என்று முழக்கங்களை எழுப்பினா்.

இதில் 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனா். இதையடுத்து கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com