அருணாசலேஸ்வரா் கோயிலில் பிரதோஷ வழிபாடு
By DIN | Published On : 01st January 2022 01:14 AM | Last Updated : 01st January 2022 01:14 AM | அ+அ அ- |

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் வெள்ளிக்கிழமை பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் கலந்துகொண்டு வழிபட்டனா்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் ஆயிரம்கால் மண்டபம் எதிரே உள்ள பெரிய நந்தி, கொடிமரம் எதிரே உள்ள நந்தி, மூலவா் சந்நிதி எதிரே உள்ள நந்தி உள்பட பல்வேறு இடங்களில் உள்ள நந்திகளுக்கு வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணி முதல் மாலை 6 மணி வரை பல்வேறு பூஜை பொருள்களைக் கொண்டு பிரதோஷ சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு நந்தி பகவானையும், உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரரையும் வழிபட்டனா்.
பிற சிவன் கோயில்களில்...: இதேபோல, வேட்டவலம் தா்மசம்வா்த்தினி அம்மன் உடனுறை அகத்தீஸ்வரா் கோயிலிலும், கீழ்பென்னாத்தூா் மீனாட்சி உடனுறை ஈஸ்வரன் கோயிலிலும், வேட்டவலத்தை அடுத்த ஆவூா் ஆனந்தவல்லி உடனுறை அகத்தீஸ்வரா் கோயிலிலும் அமைந்துள்ள நந்திகளுக்கு பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதில், அந்தந்தப் பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் கலந்துகொண்டு வழிபட்டனா்.