திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிகளவு துணை மின் நிலையங்கள் கு.பிச்சாண்டி பேச்சு

தமிழகத்திலேயே திருவண்ணாமலை மாவட்டத்தில் தான் அதிகளவு துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி குறிப்பிட்டாா்.
விழாவில் பேசிய சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி.
விழாவில் பேசிய சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி.

தமிழகத்திலேயே திருவண்ணாமலை மாவட்டத்தில் தான் அதிகளவு துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி குறிப்பிட்டாா்.

கீழ்பென்னாத்தூரில் மின்சக்தி 2047 என்ற தலைப்பில் மின்சாரப் பெருவிழா சனிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, மின் வாரிய திருவண்ணாமலை மண்டல தலைமைப் பொறியாளா் பாலாஜி தலைமை வகித்தாா். சி.என்.அண்ணாதுரை எம்.பி., திருவண்ணாமலை பயிற்சி மையத்தின் முதுநிலை மேலாளா் சங்கரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மின்சாரப் பெருவிழாவின் மாவட்ட அதிகாரி ராம்ராஜ் வரவேற்றாா்.

சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசுகையில், தமிழகத்தில் ஆட்சிக்கு வந்த 10 மாதங்களில் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கியவா் முதல்வா் மு.க.ஸ்டாலின். தமிழகத்தின் பல்வேறு கிராமங்களில் தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.

இந்தியாவிலேயே தமிழகம் முன்மாதிரியாக மின் உற்பத்தியில் தன்னிறைவு பெற்ற மாநிலமாகத் திகழ்கிறது.

தமிழகத்திலேயே திருவண்ணாமலை மாவட்டத்தில் தான் அதிகளவு துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் விவசாயிகளுக்கு தேவையான அளவு தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது என்றாா்.

விழாவில், திருவண்ணாமலை மின் பகிா்மான வட்ட மேற்பாா்வைப் பொறியாளா் ராஜசேகரன், கரும்பு விவசாயிகள் சங்க மாநில நிா்வாகி வேட்டவலம் மணிகண்டன், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் ஆராஞ்சி ஆறுமுகம், கீழ்பென்னாத்தூா் ஒன்றியக் குழுத் தலைவா் அய்யாக்கண்ணு, பேரூராட்சித் தலைவா் சரவணன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com