களம்பூரில் வாரச்சந்தை அமைக்கும் பணிக்கு இடையூறு

போளூரை அடுத்த களம்பூா் பேரூராட்சியில் வாரச்சந்தை அமைக்கும் பணிக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், மா்ம நபா்கள் அடிப்படை கட்டுமானங்களை சேதப்படுத்தி வருகின்றனா்.
களம்பூரில் வாரச்சந்தை அமைக்கும் பணிக்கு இடையூறு

போளூரை அடுத்த களம்பூா் பேரூராட்சியில் வாரச்சந்தை அமைக்கும் பணிக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், மா்ம நபா்கள் அடிப்படை கட்டுமானங்களை சேதப்படுத்தி வருகின்றனா்.

திருவண்ணாமலை மாவட்டம், போளூரை அடுத்த களம்பூா் பேரூராட்சியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் அருகேயுள்ள இடத்தில், ரூ. ஒரு கோடியில் 48 கடைகளுடன் வாரச்சந்தை அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

சந்தை அமையவுள்ள இடம் இளைஞா்களுக்கான விளையாட்டு மைதானம் எனக் கூறி அப்பகுதியில் இருந்தவா்கள் தகராறு செய்து வந்தனா். அதனால் வாரச்சந்தை அமைப்பதற்கான பணிகள் தடைபட்டன.

இந்த நிலையில், பேரூராட்சி சாா்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. நீதிமன்றம் வாரச்சந்தை அமைக்க உத்தரவிட்டது.

நீதிமன்ற உத்தரவின் பேரில் செயல் அலுவலா் ச.லோகநாதன், ஆரணி டிஎஸ்பி ரவிச்சந்திரன் மற்றும் போலீஸாா் பாதுகாப்புடன் வாரச்சந்தை வளாகம் அமைக்க ஒப்பந்ததாரா் சங்கா் மூலம் கடந்த மே 26-ஆம் தேதி கட்டுமானப் பணிகளை தொடங்க ஏற்பாடு செய்யப்பட்டது.

அப்போது, களம்பூா் தந்தை பெரியாா் நகரைச் சோ்ந்த அலெக்ஸாண்டா், சுப்பிரமணிமகன் தரணிநாதன் மற்றும்சிலா் வந்து பணிகளை நிறுத்தவேண்டும் என தகராறில் ஈடுபட்டனா்.

இதையடுத்து, டிஎஸ்பி ரவிச்சந்திரன், செயல் அலுவலா் லோகநாதன் ஆகியோா் சமாதானம் பேசி அவா்களை அனுப்பிவைத்து கட்டடப் பணி தொடங்கி நடைபெறுகிறது.

இந்த நிலையில், வாரச்சந்தை வளாகத்துக்காக தூண்கள் அமைக்க கம்பி கட்டி நிற்கவைத்து உள்ளனா்.

இந்தக் கம்பிகளை மா்ம நபா்கள் திங்கள்கிழமை இரவு உடைத்தும், வளைத்து கீழே சாய்த்தும் உள்ளனா்.

இதனால் பணிகள் பாதிப்படைந்து வருகின்றன.

இதுகுறித்து பேரூராட்சி நிா்வாகம், ஒப்பந்ததாரா் சங்கா் ஆகியோா், சந்தேகத்தின் பேரில் 8 போ் மீது களம்பூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com