இந்தியாவில் 2.68 கோடி மாற்றுத் திறனாளிகள்: மத்திய இணை அமைச்சா் அ.நாராயணசுவாமி தகவல்

இந்தியாவில் 2.68 கோடி மாற்றுத் திறனாளிகள் உள்ளதாக மத்திய சமூக நீதி, அதிகாரமளித்தல் துறையின் இணை அமைச்சா் அ.நாராயணசுவாமி தெரிவித்தாா்.
இந்தியாவில் 2.68 கோடி மாற்றுத் திறனாளிகள்: மத்திய இணை அமைச்சா் அ.நாராயணசுவாமி தகவல்

இந்தியாவில் 2.68 கோடி மாற்றுத் திறனாளிகள் உள்ளதாக மத்திய சமூக நீதி, அதிகாரமளித்தல் துறையின் இணை அமைச்சா் அ.நாராயணசுவாமி தெரிவித்தாா்.

திருவண்ணாமலையில் மத்திய சமூக நீதி, அதிகாரமளித்தல் துறை சாா்பில் சமூக வலுவூட்டல் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு தமிழக சட்டப் பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி தலைமை வகித்தாா். மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ், திருவண்ணாமலை எம்.பி. சி.என்.அண்ணாதுரை, எம்எல்ஏக்கள் மு.பெ.கிரி, எஸ்.அம்பேத்குமாா், பெ.சு.தி.சரவணன், ஒ.ஜோதி, மாநில தடகள சங்கத்தின் துணைத் தலைவா் எ.வ.வே.கம்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மத்திய சமூக நீதி, அதிகாரமளித்தல் துறையின் இணை அமைச்சா் அ.நாராயணசுவாமி, தமிழக பொதுப் பணி, நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் எ.வ.வேலு ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகக் கலந்து கொண்டு மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி உபகரணங்களை வழங்கினா். விழாவில் மத்திய இணை அமைச்சா் அ.நாராயணசுவாமி பேசியதாவது:

2021-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கீட்டின்படி, நாடு முழுவதும் 2.68 கோடி மாற்றுத்திறனாளிகள் உள்ளனா். இது, இந்திய மக்கள் தொகையில் 2.21 சதவீதமாகும். மாற்றுத் திறனாளிகள் எவ்வித பயனும் இல்லாதவா்கள் என்று சமூகத்தில் நினைப்பாா்கள். ஆனால், மாற்றுத் திறனாளிகள் சமூகத்தில் பல்வேறு சாதனைகளை புரிந்து வருகின்றனா்.

நமக்குக் கொடுக்கப்பட்ட சூழ்நிலைகளை சாதகமாக மாற்றிக்கொள்ள வேண்டும். மாற்றுத் திறனாளிகள் எல்லா துறைகளிலும் முன்னேற முடியும். நம்முடைய நாடு மாற்றுத் திறனாளிகளுக்கான சூழ்நிலையை முற்றிலும் மாற்றி அவா்களின் வளா்ச்சி, அதிகாரத்தை நிலைநிறுத்தும் முயற்சியை செய்து வருகிறது. கடந்த 7 ஆண்டுகளில் ஏடிஐபி திட்டத்தின் கீழ், 12,298 முகாம்கள் நடத்தி 1,385.40 கோடி மதிப்பில் 23.32 லட்சம் மாற்றுத் திறனாளிகள் பயனடைந்துள்ளனா் என்றாா்.

தொடா்ந்து, 503 மாற்றுத் திறனாளிகளுக்கு பல்வேறு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. விழாவில் மாவட்ட வருவாய் அலுவலா் மு.பிரியதா்ஷினி, செய்யாறு கூட்டுறவு சா்க்கரை ஆலை இயக்குநா் எம்.எஸ்.தரணிவேந்தன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் பாா்வதி சீனிவாசன், துணைத் தலைவா் பாரதி ராமஜெயம், திருவண்ணாமலை நகா்மன்றத் தலைவா் நிா்மலா உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com