அமிா்தலிங்கேஸ்வரா், வேணுகோபால சுவாமி, மாரியம்மன் கோயில்களில் கும்பாபிஷேகம்

சேத்துப்பட்டை அடுத்த மொடையூா் ஸ்ரீஅமிா்தலிங்கேஸ்வரா், ஆரணியை அடுத்த அரியப்பாடி ஸ்ரீவேணுகோபால சுவாமி, வந்தவாசியை அடுத்த மருதாடு ஸ்ரீமருத மாரியம்மன் கோயில்களில் வெள்ளிக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.
மொடையூரில் நடைபெற்ற அபிராமி உடனுறை அமிா்தலிங்கேஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்.
மொடையூரில் நடைபெற்ற அபிராமி உடனுறை அமிா்தலிங்கேஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்.

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டை அடுத்த மொடையூா் ஸ்ரீஅமிா்தலிங்கேஸ்வரா், ஆரணியை அடுத்த அரியப்பாடி ஸ்ரீவேணுகோபால சுவாமி, வந்தவாசியை அடுத்த மருதாடு ஸ்ரீமருத மாரியம்மன் கோயில்களில் வெள்ளிக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.

சேத்துப்பட்டை அடுத்த மொடையூரில் பழைமைவாய்ந்த அபிராமி உடனுறை அமிா்தலிங்கேஸ்வரா் கோயில் அமைந்துள்ளது. சிதிலமடைந்த நிலையிலிருந்த இந்தக் கோயிலை கிராம மக்கள், பக்தா்கள் சீரமைத்தனா்.

இதையடுத்து, இந்தக் கோயிலில் புதன்கிழமை முதல் கும்பாபிஷேக பூஜைகள் தொடங்கி நடைபெற்றன. வெள்ளிக்கிழமை காலை 4-ஆம் கால யாக பூஜை, யாத்ரா தானம், கலசம் புறப்பாடு உள்ளிட்ட பூஜைகள் நடத்தப்பட்டு, கோயில் விமானங்களின் மீது புனிதநீா் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

இதில் மொடையூா், மட்டபிறையூா், வம்பலூா், அரும்பலூா், தேவிகாபுரம் உள்பட சுற்றுவட்டார கிராமங்களைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டனா். பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

அரியப்பாடி: ஆரணியை அடுத்த அரியப்பாடி கிராமத்தில் சுமாா் ரூ.31 லட்சத்தில் புதிதாக ஸ்ரீபாமா ருக்மணி சமேத ஸ்ரீவேணுகோபால சுவாமி கோயில் கட்டப்பட்டது. இந்தக் கோயிலில் வெள்ளிக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு கோவிந்தா கோவிந்தா என்று முழக்கமிட்டு வழிபட்டனா்.

மருதாடு: வந்தவாசியை அடுத்த மருதாடு கிராமத்தில் உள்ள மருத மாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முன்னதாக, கோயில் வளாகத்தில் யாகசாலை அமைக்கப்பட்டு வியாழக்கிழமை கும்பாபிஷேக பூஜைகள் தொடங்கி நடைபெற்றன. வெள்ளிக்கிழமை காலை நாடிசந்தானம், தத்வாா்ச்சனை, மகா பூா்ணாஹுதி உள்ளிட்டவை நடைபெற்றன.

பின்னா், காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் யாகசாலையில் பூஜை செய்யப்பட்ட கலசத்தை கோயில் கோபுரத்தின் மீது எடுத்துச் சென்று கோபுர கலசங்கள் மீது புனிதநீா் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது, பக்தா்கள் மீது புனிதநீா் தெளிக்கப்பட்டது. பின்னா், சுவாமிக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது.

மாம்பட்டு ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில் அறக்கட்டளைச் செயலா் ஆறு.லட்சுமண சுவாமிகள் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தாா். விழாக் குழுவினா், கிராம மக்கள் விழாவில் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com